பக்கம்:மன ஊஞ்சல்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - மன ஊஞ்சல் இதைக் கேட்ட பிறகுதான் தங்கத்திற்குத் தான் தெருவில் மயக்கம் போட்டுக்கிடந்த உண்மை தெரிய வந்தது. "ஐயா! ராதா எங்கே? ராதாவையும் தூக்கி வந்திருக் கிறீர்களா?' என்று கேட்டாள் தங்கம். “ராதாவா? அது யார் அது? நீ மட்டும்தானே தெருவில் கிடந்தாய்’ என்று கேட்ட அந்த மனிதன், "ஒகோ! சரிதான் இராத்திரி ஒரு பையனோடு பேசிக் கொண்டே போனது அந்தப் பெண் தான் போலிருக்கிறது!’ என்று மெல்லச் சொல்லிக் கொண்டான். இது த ங் க த் தி ன் காதில் விழாமலில்லை. ராதாவோ ந ட ர | ச .ே னா அப்படித் தன்னைத் தனியே போட்டுவிட்டுப் போயிருக்க முடியாது என்று அவள் நம்பினாள். ஆகவே அந்த மனிதன் வார்த்தை களில் அவளுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. இருந்தாலும் அவள் தன் அவநம்பிக்கையையோ அவனையோ, கிழவி யையோ பற்றித் தான் கொண்டிருந்த சந்தேகத்தையோ வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவனை நோக்கி ஐயா! உங்கள் உதவிக்கு நான் மிகவும் நன்றியுடையவளாயிருப்பேன்: என்றும் இதை மறக்க மாட்டேன். போய் வருகிறேன்!” என்று சொல்லிப் புறப்படுவதற்காக எழுந்தாள். 'பெண்ணே! அவ்வளவு எளிதாக உன்னைப் போக விடுவதற்காகவா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை இங்கே தூக்கி வந்தேன்? இரு இரு’ என்றான் அந்த மனிதன். தங்கம் நடுங்கினாள். அவன் .ெ சா ல் லு வ த ன் பொருள் அறியாமல் தடுமாறினாள். 'ஐயா என் பெற்றோர் தேடுவார்கள். தயவுசெய்து என்னை வீட்டுக்குப் போக அனுமதியுங்கள்' என்றாள் தங்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/88&oldid=854545" இலிருந்து மீள்விக்கப்பட்டது