பக்கம்:மன ஊஞ்சல்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 79 "பெண்ணே! உன்னைப் போக அனுமதிக்கிறேன். ஆனால் அதற்கு முன்னால் நீ எனக்கொரு வாக்குறுதி கொடுக்க வேண்டும் சம்மதமா?' என்று கேட்டான் அவன். 'பார்க்கலாம்! இப்போது என்னை வீட்டுக்குப் போக விடுங்கள்?’ என்றாள் தங்கம்! - "பெண்ணே அதிகாரத்தில் உள்ளவர்கள் சொல்கிற வார்த்தை யெல்லாம் உன்னிடத்தில் நான் எதிர்பார்க்க வில்லை. உறுதி கொடுப்பதாக ஒப்புக் கொள்ள வேண்டும்.' “என்னால் முடிந்தால் செய்கிறேன். இப்போது என்னைப் போக விடுங்கள்' என்றாள் தங்கம். அவள் உடலும் உள்ளமும் இரண்டுமே அந்த இடத்தை விட்டு உடனே போய்விடத் துடித்தன. - 'உன்னால் முடியும். அதுவும் உன்னால்தான் முடியும்!” என்று அழுத்தமாகச் சொன்னான் அந்த மனிதன். 'சரி, சீக்கிரம் சொல்லுங்கள்!' என்றாள் தங்கம். "தங்கம், சொல்லுகிறேன், கேள். உலக வாழ்க்கை என்றால் என்னவென்றுணராமல் தன்னந் தனியாக நான் இத்தனை ஆண்டுகளையும் தாறுமாறாகத் கழித்து விட்டேன். மூக்குக்கயிறில்லாத மாடும், கடிவாளமில்லாத குதிரையும் நேரான பாதையில் போகாது என்பார்கள். அப்படித்தான் இதுவரை என் வாழ்வு இருந்து விட்டது. இனிமேல் நான் குடியும் குடித்தனமுமாக வாழ விரும்பு கிறேன். தங்கம், அதற்காகத்தான் உன்னைக் கேட்கிறேன் என்னோடு சேர்ந்து குடித்தனம் நடத்த நீ இணங்க வேண்டும். இந்த உலகத்தில் நான் எத்தனையோ பெண்களைப் பார்த் திருக்கிறேன். ஆனால் உன்னைப்போல் மனைவியாக இருக்கத் தகுதியான வேறொரு பெண்ணை நான் பார்த்த தில்லை. தங்கம் என்னைக் கட்டிக் கொள்ள ஒப்புக்கொள் கிறாயா? திருமணத்திற்கு நேரம் பார்க்கட்டுமா?" என்று கேட்டான் ஆந்தப் பயங்கர மனிதன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/89&oldid=854546" இலிருந்து மீள்விக்கப்பட்டது