பக்கம்:மன ஊஞ்சல்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சலின் என் மனக்கருத்து ஒரு நாவல் என்பது அதைப்படிக்கத் தொடங்கியவுடன் ஒரே எண்ணத்தோடு நம் நினைவுகளை ஒன்றுபடுத்தி நம்மை அக்கதையிலேயே ஐக்கியப்படுத்தி அதில்வரும் கதையை நம் கதையாகவும், நினைத்து எடுத்த புத்தகத்தை கீழே வைக்க மனமில்லாமல் அதன் முடிவைத் தெரிந்து கொள்ளும் வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தன்னையே மறந்து ஒரு நாவலைப் படிக்கிறோமென்றால் அதைவிட சிறந்த நாவல் இவ்வுலகிலேயே இல்லையென்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒரு காதல், கவிநய நாவல் தான் நம் கவிஞர் திரு. நாரா நாச்சியப்பன் அவர் களின் மன ஊஞ்சல். இது ஒரு மகத்தான சிறந்த நாவல். ஒரு பெண்ணின் மனத்தைப் பற்றி ஒரு பெண் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு இந்நாவலைத்தான் படிக்க வேண்டும். அந்தக் காலத்தில் ஏற்படும் அன்பிற்கும் இந்தக் காலத்தில் ஏற்படும் அன்பிற்கும் எவ்வளவு வேற்றுமை கள் இருக்கின்றன என்பதை இக்கதையில் ஆசிரியர் மிக அழகாக விளக்கியுள்ளார். ஒரு பெண் தன் வாழ்க்கையைத் தான் விரும்பியபடி தான் அமைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், அவள் தன் விருப்பத்தை நிறைவேற்றுமுன் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காதலில் சிறிது ஏமாந்தாலும், படுபாதாளத்தில் விழுந்துவிட நேரிடும் என்பதை மன ஊஞ்சல் மூலம் நாம் மிகத் தெளிவாக அறிந்து கொள்கிறோம். இந்நாவலை ஒருமுறை படித்தால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதில் உள்ள கதை நயமும் காதல் சுவையும் நம் மனத்தை விட்டு என்றும் நீங்காத நினைவுகளாய் இருக்கின்றன. J。可r邸

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/9&oldid=854547" இலிருந்து மீள்விக்கப்பட்டது