பக்கம்:மன ஊஞ்சல்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மன ஊஞ்சல் தங்கம் திகைத்துப் போனாள். தான் அவனிடமிருந்து தப்ப முடியாதா என்று துடித்துப் போனாள். . அவள் தயங்கி நிற்பதைக் கண்ட அந்த மனிதன் மேலும் பேச ஆரம்பித்தான். 'தங்கம்! என்னைத் தள்ளிவிடாதே! இத்தனை நாளும் நான் கொலை, கொள்ளை, குடி கூத்தியென்று அலைந்தேன், சூதாடியும், சோம்பிக் கிடந்தும் காலத்தை ஒட்டினேன். ஆனால், அந்த வாழ்க்கை எனக்குக் கசந்து விட்டது. இனி மேல், உலகத்தாரைப் போல ஒழுங்கான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். என்னிடம் பணம் நிறைய இருக்கிறது. நீ மட்டும் சம்மதித்தால் நான் உனக்குத் தனியாக ஒரு மாளிகை கட்டித் தருகிறேன். வேலைக்கு ஆட்கள் வைக்கிறேன். நாம் நம் வாழ்க்கையில் ஏழை எளியவர்களைப் போல் அவதிப் பட வேண்டியதில்லை. பணக்காரர்களைப் போலவே வாழு வோம், படித்த மேதைகளோடு பழகுவோம். பட்டம், பதவியில் உள்ளவர்களோடேயே உறவாடுவோம். வாழ்க் கையில் என்னென்ன இன்பம் உண்டோ அத்தனையும் அனுப விப்போம். இவ்வளவுக்கும் பணம் வேண்டுமே யென்பாய். என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. இதுவரை கொள்ளை யடித்த பணமெல்லாம் சூதாடியது போக மீதிப்பட்ட ஏராள மான் பணம் முழுவதும் ஓரிடத்திலே புதைத்து வைத்திருக் கிறேன். அது நமக்கு உதவும். - ஆனால், இனிமேல் நான் அந்த மாதிரியான தீய வேலைகட்குப் போகமாட்டேன். உனக்கு வேண்டுமானால் சத்தியம் செய்து கொடுக்கிறேன். "தங்கம் உன்னை ஊரெல்லாம் நல்ல பெண் என்று சொல்கிறார்கள். பாவம், இவ்வளவு நல்ல பெண்ணுக்கு இவ் வளவு நாளாய்க் கலியாணம் ஆகாமல் இருக்கிறதே என்று சொல்லுகிறார்கள். இனிமேல் அந்த க் கவலை வேண்டாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/90&oldid=854548" இலிருந்து மீள்விக்கப்பட்டது