பக்கம்:மன ஊஞ்சல்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 81 நான் உன்னைத் தங்கம் போல் வைத்துக் காப்பாற்றுகிறேன். என்ன சொல்லுகிறாய்?' என்று கேட்டான், அந்தப் பயங்கர மனிதன். அவன் பேசப் பேசத் தங்கத்தின் பயம் அதிகரித்துக் கொண்டே வந்தது. அவனிடமிருந்து தான் தப்பவே (Լpւգ. யாது போலிருந்தது. அவள பேசாமலிருந்தாள். அவன் தொடர்ந்து பேசினான்! 'தங்கம் நான் குடிகாரன், கொள்ளைக்காரன், சூதாடி என்று எந்தப் பெண்ணும் என்னைக் கட்டிக் கொள்ள மறுக் கிறாள். இதே கவலையால் என் தாயும் இறந்து போய்' விட்டாள். எனக்குத் துணையாக-உறவு என்ற பெயரில் இருப் பது இந்தப் பாட்டியொருத்திதான். நீயும் ஒப்புக் கொள்ளா விட்டால், " நான் தூக்குப் போட்டுக்கொண்டு சாக வேண்டியது தான். திருந்தி வாழ நினைக்கிற ஒருவனுக்கு இந்த உலகில் இடமில்லையா தங்கம்?' என்று கேட்டான். அவனுடைய கதை முழுவதையும் பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்த தங்கத்திற்கு புளியமரத்துச் சந்தில் ராதா சொன்ன ராக்கப்பன் கதை நினைவுக்கு வந்தது. இவன் சொன்ன கதையும், அந்த ராக்கப்பன் கதையும் ஒரே மாதிரி யாக இருந்ததைக் கண்டபோது அவளுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஒரு வேளை அந்த ராக்கப்பனுடைய ஆவியைத் தான் இந்தச் சூனியக்காரக் கூனற்கிழவி இப்படி உருமாற்றி யிருக்கிறாளோ என்று எண்ணினாள். அவள் குளறிக் கொண்டே, 'ஐயா, நீங்கள்...நீங்கள் யார்?' என்று கேட்டாள். "என்னைத் தெரியவில்லையா? ஆம், உண்மைதான்! நான் முதலிலேயே என் பெயரை உன்னிடம் சொல்ல மறந்து ւն-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/91&oldid=854549" இலிருந்து மீள்விக்கப்பட்டது