பக்கம்:மன ஊஞ்சல்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

bér ஊஞ்சல் 11. ராதா,உனக்குப்பிடித்திருக்கிறதா? தங்கத்தைக் காணவில்லை என்று புளியமரத்துச் சந்துக்குப் போய்வந்த நடராசன் தெரிவித்தவுடனே ராதா திகைத்துப்போய்விட்டாள். அவளுக்கு என்ன செய்வ தென்றே புரியவில்லை. சிறிது நேரம் அப்படியே அசைவற்று: நின்றாள். அந்தக் குழப்பமான அமைதியைக் குலைத்தது நடராசனின் கேள்வி. "ராதா! தங்கத்தின் வீட்டில் போய்ச் சொல்லு Geантиот ?** என்ன செய்வதென்றே புரியாமல் குழம்பிக் கொண் டிருந்த அவளுக்கு இந்த யோசனை ஒரு வழிகாட்டியாக இருந்தது. 'சரி, வாருங்கள்!” என்று அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புயல் வேகத்தில் வீதியில் நடை போட்டாள் ராதா. நடராசனை மட்டும் இழுத்துக்கொண்டு நடக்கா விட்டால் அவள் பறந்திருப்பாளோ என்னவோ? அவர்கள் தங்கத்தின் வீட்டுக் கதவைப் படபடவென்று தட்டியவுடன், கந்தசாமி வாத்தியார் வந்து கதவைத் திறந் தார். மாடியில் இருந்த அண்ணாமலைப் பண்டிதர் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அடுக்களையில் அப்போதுதான், தங்கம் திரும்பி வருவதை எதிர்பார்த்து எதிர்பார்த்துக் காத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/93&oldid=854551" இலிருந்து மீள்விக்கப்பட்டது