பக்கம்:மன ஊஞ்சல்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - மன ஊஞ்சல் திருந்து எடுத்து வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டுக்கெதிரில் தடுக்கில் படுத்திருந்த மரகத அம்மாள் எழுந்து உட்கார்ந் தாள். கந்தசாமி வாத்தியார் தங்கம்தான் கோயிலிலிருந்து திரும்பி வந்துவிட்டாள் என்ற எண்ணத்தில் சாவதானம்ாகக் கதவைத் திறந்தார். அவர் கதவைத் திறந்துவிட்டவுடனே, ராதா உள்ளே பாய்ந்து வந்தாள். நடராசனும் பின்னால் நுழைந்தான். “ராதா......தங்கம்?' என்று கந்தசாமி வாத்தியார் கேட்பதற்குள்ளே, புளிய மரச் சந்தில்...... என்று நடராசன் சொல்ல ஆரம்பித்தான். புளியமரச் சந்து என்ற வார்த்தைகளைக் கேட்டவுடனேயே, மரகத அம்மாள் பதறிக்கொண்டு அடுக்களையிலிருந்து ஓடி வந்தாள். நடராசன் நடந்ததையெல்லாம் வி வ ரித் து ச் சொல்லி முடிக்கும் வரை பெற்றவர்கள் இருவரும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். அவன் சொல்லி முடித்து, அவளைக் காணவில்லை என்று தெரிவித்தவுடன், "மகளே! தங்கம்!" என்ற சொற்கள் துயரக் குறிப்புக் கலந்ததாய் இருவர் வாயிலிருந்தும் ஒரே சமயத்தில் வெளிப்பட்டன. அவர்கள் இருவரும்-தாயும் தந்தையும் தங்கத்திடம் வைத்திருந்த அன்பில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்று சொல்ல முடியாமலிருந்தது. கந்தசாமி வாத்தியார் தங்கத்தைக் கண்ணுக்குக் கண்ணாக நேசித்தார் என்று சொன்னால், மரகத அம்மாள் அவளைத் தன் உயிருக்கு உயிராகப் போற்றி வந்தாள் என்று சொல்லவேண்டும். அப்படிப்பட்ட அவர்கள் இருவரும், புத்தம் புதிதாகத் தங்கத்தைக் காணவில்லை என்ற செய்தியைக் கேட்டதும் தத்தம் உள்ளத்திலே கொண்ட திசைப்பும், பிரமிப்பும், கலக்கமும், துயரும்த கவலையும் அந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடாக வெளிவந்த வார்த்தைகளும் ஒன்றாக இருந்தன என்பது ஆச்சரியப்படத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/94&oldid=854552" இலிருந்து மீள்விக்கப்பட்டது