பக்கம்:மன ஊஞ்சல்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 85 தக்கதே அல்ல. கீழே ஏற்பட்ட கலவரமான சந்தடியைக் கேட்டு, மெல்ல மெல்லப் படிகளிலே அடியெடுத்துவைத்து இறங்கி வந்தார் அண்ணாமலைப் பண்டிதர். என்ன செய்தி யென்று கேட்டுத் தெரிந்துகொண்ட அவர் சிறிதேனும் கலவரப்பட்டவராகத் தோன்றவில்லை. ஆனால், அவர் நடராசனை நோக்கிப் பேசிய அந்தச் சொற்கள் அவர் மனவருத்தத்தை ஓரளவு வெளிக்குப் புலப் படுத்துவதாக இருந்தன. "நடராசா, உன்னுடைய பைத்தியக்காரத்தனத்தால் தான் அந்தப் பெண் காணாமல் போய்விட்டாள்! இந்த வார்த்தைகளைத் தவிர அவர்மேற் கொண்டு எதுவும் சொல்லவில்லை. அவர் அவ்வாறு கூறியபோது நடராசனின் முகத்தில் ஏற்பட்ட சங்கடமான உணர்ச்சியை யாரும் கவனிக்கவில்லை. - கந்தசாமி வாத்தியார் அப்பொழுதே ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு தங்கத்தைத் தேடக் கிளம்பினார். ஆனால், அண்ணாமலைப் பண்டிதர் காலையில் தேடி கொள்ளலாமென்று சொல்லி அவரைத் தடுத்துவிட்டார். பெரியவரின் வார்த்தையை மீற அவருக்குத் துணி வில்லை. எல்லோரும் தத்தம் படுக்கைக்குத் திரும்பினார்கள். நடராசனும் ராதாவும் வெளியில் வந்தார்கள். ராதாவை வீட்டில் விட்டு விட்டு நடராசன் அந்த இருட்டில் கால்போன போக்கில் நடந்து சென்றான். ஊரைச் சுற்றிச் சுற்றிக் கடைசியில் அந்தப் புளியமரச் சந்துக்கே திரும்பி வந்தான். அவன் அந்தச் சந்துக்குத் திரும்பி வந்தபோது நள்ளிரவு நேரம். அந்தப் புளியமரத்தின் சில கிளைகள் குலுங்கிக் கொண்டிருந்தன. மரத்தடியில் ஒரு லாந்தர் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு மனிதனுடைய உருவம் நிழல்போலத் தரையில் காலூன்றி நின்று கொண்டிருந்தது தெரிந்தது. இப்போது நடராசன் அச்சப்படவில்லை நேராக மரத்தடியைநோக்கி நடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/95&oldid=854553" இலிருந்து மீள்விக்கப்பட்டது