பக்கம்:மன ஊஞ்சல்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 86 மன ஊஞ்சல் ஆன் வரும் ஓசையைக் கேட்டு அந்த மரத்தடியில் நின்றவன் சந்தேகத்தோடு திரும்பிப் பார்த்தான். மரத்தில் இருந்தவனும் குலுக்குவதை நிறுத்தி விட்டு நடராசன் வருவதை உற்று நோக்கினான், 'ஐயா! இந்தச் சந்தில் ஒரு பெண் மயக்கமாகக் கிடந்தாளே, நீங்கள் பார்த்தீர்களா?' என்று கேட்டான் நடராசன். அவர்கள் தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியில் நடராசனுக்கு ஏற்பட்ட சிறு நம்பிக்கையையும் கைவிட வேண்டியதாயிற்று. பித்துப் பிடித்தவனைப்போல் அவன் நடந்து சென்றான். தன்னை யறியாமலே அவன் கால்போன போக்கில் நடந்து தன் வீட்டு வாசலுக்கே வந்து சேர்ந்தான். வீட்டுக்குள் நுழையவே அவனுக்கு விருப்பமில்லை. ஆனால், அவன் கால்கள் அயர்ந்து போயிருந்தன. ஒரே களைப்பாயிருந்தது. ஆகவே கொஞ்சநேரம் தூங்கி ஒய்வு பெறலாம் என்று அவன் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினான். கதவு திறக்கப்பட்டதும் நேராகத் தன் அறைக்குச் சென்று படுத்துக்கொண்டான். ஆனால் துாக்கம் தான் வரவில்லை. மறுநாள் காலையில் கந்தசாமி வாத்தியார் ஒரு பக்கம், முருகேச வாத்தியார் ஒரு பக்கம். நடராசன் ஒரு பக்கமாக ஊரையும் ஊரைச் சுற்றி இருந்த இடங்களையும் தேட ஆரம்பித்தார்கள், வாத்தியார்கள் இருவரும் பள்ளிக் கூட மணியடிக்கிறவரையிலே எங்கெங்கோ தேடிப் பார்த்து விட்டு, வழியில் தெரிந்த மிக முக்கியமான நண்பர்கள் சிலரிடம் தங்கம் தட்டுப்பட்டால் தெரிவிக்கும்படி கூறி விட்டுப் பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள். பள்ளிக்கூடத்தில் கந்தசாமி வாத்தியாருக்கு வேலையே ஒடவில்லை. சாயுங் காலம் பள்ளிக்கூடம் விட்ட பிறகும் வெகுநேரம் ஊரைச் சுற்றித் திரிந்துவிட்டுத் தான் வீட்டுக்குத் திரும்பினார். மரகத அம்மான் அன்று முழுவதும் சாப்பிடவேயில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/96&oldid=854554" இலிருந்து மீள்விக்கப்பட்டது