பக்கம்:மன ஊஞ்சல்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 87 வீட்டில் இருந்த அண்ணாமலப் பண்டிதர் இருந்த இடத்தில் இருந்து கொண்டே "கவலைப்படாதே! தங்கம் கிடைத்து விடுவாள்!" என்று எவ்வளவு சமாதானம் சொல்வியும் அவள் மனம் அமைதி யடையவில்லை. காலையில் வீட்டை விட்டுப் புறப்பட்ட நடராசன் திரும்ப வரவேயில்லை. கதவிப் பட்டணத்திற்குத் தினந்தோறும் போகும் பழக்கப்படியும் அவன் வரவில்லை. ஒரே மூச்சாக அவன் தங்கத்தைத் தேடு வதில் ஈடுபட்டிருந்தான் போலும். இவ்வளவு அமளிக் கிடையிலும் சுந்தரேசன் அண்ணாமலைப் பண்டிதரிடம் கடிதம் வாங்கிக்கொண்டு சென்னைக்குப் புறப்பட்டு விட்டான். பொழுது சாய்ந்து இருள் பரவி வரத் தொடங்கியது. அடுத்த வீட்டு ராதா மெல்லத் தங்கத்தின் வீட்டுக்கு வந்தாள். பத்து நாள் பட்டினியும் நூறு நாள் கவலையும் ஒன்று சேர்ந்தது போன்ற தோற்றத்தோடு உட்கார்ந்திருந்த மரகத அம்மாளைப் பார்த்ததும் அவளுக்கே அழுகை யுண்டாகிவிட்டது. எல்லாம் இந்த நடராசனால் வந்த வினை என்றுதான் அவள் நினைத்துக் கொண்டாள். அவன் மட்டும் தங்கள் பாதையில் குறுக்கிடாமலிருந்திருந்தால் இதெல்லாம் நேரிட்டிருக்காது என்பது அவள் எண்ணம்: அவள் வந்த சிறிது நேரத்திற்குப் பிறகு முருகேச வாத்தி யாரும் அங்கு வந்து சேர்ந்தார். கந்தசாமி வாத்தியார் அவரைப் பார்த்துப் பார்த்து விம்மி விம்மிப் பெருமூச்செறிந் தார். வாய்விட்டு ஒசையிட்டு அவர் அழவில்லையே தவிர, அவர் நெஞ்சம் துயரத்தால் புழுங்கிக் கொண்டிருந்தது. கண்களில் நீர் தடையில்லாத ஊற்றுப் போல் ஊறி வழிந்து கொண்டேயிருந்தது. யாருக்கு யார் சமாதானம் சொல்லுவதென்று தெரியாமல் இவர்களெல்லாம் கீழே இம்மென்று துயரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/97&oldid=854556" இலிருந்து மீள்விக்கப்பட்டது