பக்கம்:மன ஊஞ்சல்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மன ஊஞ்சல் தோடு இருந்து கொண்டிருந்தார்கள். அண்ணாமலைப் பண்டிதரோ மாடியில் தம் அறையில் இருந்தபடி திருவாச கத்தில் திருவூசல் பாடிக்கொண்டிருந்தார். புயலடிக்கும் தேரத்தில் ஆனந்த பைரவி பாடியது போல இருந்தது அவருடைய போக்கு. பாட்டு முடித்ததும் அவர் கீழே இறங்கி வந்தார். அவர் சிறிதுகூடக் கவலைப் படாதவர் போல, புன்சிரிப்புடன், கந்தசாமி வாத்தியாரையும்-குறிப்பாக மரகதஅம்மாளையும் நோக்கி, "ஒரு நாள் தங்கத்தைப் பிரிந் திருப்பதற்கே நீங்கள் இவ்வளவு துயரப்பட்டால், அவளைத் திருமணம் செய்து கொடுத்த பிறகு என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் இருவராலும் வாய் திறந்து பதில் சொல்ல முடியவில்லை. 'திருமணம் செய்து கொடுத்தால், மகள் எங்கே போனாள், எப்படியிருக்கிறாள் என்ற செய்தியெல்லாம் அவ்வப் போது தெரிந்துகொள்ளலாம். விரும்பியபோது போய்ப் பார்த்து வரலாம். இப்போது அவள் எங்கே இருக் கிறாள், என்ன ஆனாள்? என்பதே தெரியவில்லையே எப்படி வருத்தமில்லாமல் இருக்கும்?' என்று கேட்டாள் ராதா, அவர கேட்ட மாதிரியையும் நடந்து கொண்ட போக்கையும் பார்த்தால் அவரே தங்கம் இருக்கும் இடத்தை அறிந்து வைத்திருப்பது போல எண்ணவும் இடமேற்பட்டது. துயரத்தோடு சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவர்கள் அனை வரும், திடீரென்று அண்ணாமலைப் பண்டிதர் கடுமையான குரலில், ஏன் தங்கம் எங்கே போயிருந்தாய்?' என்று கேட்டபோது, இவருக்கு என்ன கிறுக்குப் பிடித்து விட்டதோ என்று நினைத்துக்கொண்டே நிமிர்ந்து பார்த்தார்கள். என்ன ஆச்சரியம்! அங்கே அவர்கள் மத்தியில் தங்கம் நின்று கொண்டிருந்தாள். மரகத அம்மாள் ஒடிச் சென்று அவளைக் கட்டிப் பிடித்து அணைத்துக் கொண்டாள். அண்ணாமலைப் பண்டிதர் தான் தன் மாய சத்தியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/98&oldid=854557" இலிருந்து மீள்விக்கப்பட்டது