பக்கம்:மன ஊஞ்சல்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 89 அவளை அங்கே வரச் செய்துவிட்டார் என்று மூட நம்பிக்கையில் ஆழ்ந்துள்ள அவள் மனம் எண்ணமிட ஆரம் பித்தது. ஆனால் அவளைத் தேடி அழைத்து வந்தது நடராசன் என்பது தெரியும்படியாக அவனும் அங்கே வந்திருந்தான். வெளிக்கதவு திறந்தே கிடந்த படியால் அவர்கள் உள்ளே நுழைந்ததை யாரும் காணவில்லை, ஆனால் தங்கத்தைக் கண்டவுடன் எல்லோருக்கும் மகிழ்ச்சி யாக இருந்தது. வானத்திலிருந்து அவள் அங்கே வந்து திடுதிப்பென்று குதித்தது போல் இருந்தது. மரகதம்மாள் அவளைப் பிடித்தனைத்துக் கொண்டு 'தங்கம், எங்கே போயிருந்தாய்?’ என்று கேட்டாள். ராதாவும், 'தங்கம் உனக்கு என்ன ஏற்பட்டது?" என்று கேட்டாள். "எல்லாம் அப்புறம் சொல்லுகிறேன். எனக்கு இப்போது ஒரே பசியும் களைப்புமாயிருக்கிறது' என்றாள் தங்கம். உடனே, மரகத அம்மாள் அவளுக்குச் சோறு போட்டுத் தாங்கச் செய்தாள். முருகேச வாத்தியாரும் நடராசனும் வீட்டுக்குத் திரும்பினார்கள். ராதா, அங்கேயே தங்கத் துக்குத் துணையாகத் தங்கியிருப்பதாகச் சொன்னாள். எல்லோரும் மள நிம்மதியுடன் சாப்பிட்டுவிட்டுப் படுக்கச் சென்றார்கள். அன்று இரவுப் பொழுது அமைதியாசக் கழிந்தது. மறுநாள் காலையில் தங்கமும் ராதாவும் மல்லிகைப் பந்தலுக்குப் போய் அதனடியில் அமர்ந்து கொண்டார்கள். "ராதா, நீங்கள் இருவரும் அந்தச் சந்தில் ஏன் என்னைத் தனியே விட்டு விட்டுப் போனீர்கள்?' என்று தங்கம் கேட்டாள். ராதா நடந்த விவரத்தை யெல்லாம் சொல்லி விட்டு, 'தங்கம் நீ எப்படி அங்கிருந்து காணாமற் போனாய்’’ என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/99&oldid=854558" இலிருந்து மீள்விக்கப்பட்டது