பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

105

இந்தப் பெண்ணோடு அம்மா - இதோ இருக்கிற பூவாயி; என் வீட்டிலே தான் வேலை செய்யுது. பரணையிலேருந்து விறகு எடுத்துப் போட்டுக் கிட்டிருந்தப்போ, கீழே விளையாடிக் கிட்டிருந்த இது மேலே தவறுதலா விழிந்துட்டுது, அப் படின்னு சொன்னதும், டாக்டரு அதைக் குறிச் சிக்கிட்டு, அவசரமா குழந்தையை உள்ளே எடுத்து கிட்டுப் போனாரு.’’ என்று பொன்னி கூறினாள்.

'ஆபத்துக்குப் பாவமில்லேன்னு என்னைக் காப்பாத்தறதுக்காக, எஜமான் எப்படியெல்லாம் பாடு பட்டிருக்காரு. இவ்வளவு பொன்னான எஜமானைப் புரிஞ்சுக்காம அவரையே அழிக்க ணும்னு ஆசைப்பட்டேனே' என்று ஆறுமுகம் புலம்பினான்.

உடனே பொன்னி, எஜமான் இது மட்டுமா செஞ்சாறு? நமக்கு அவரு மனச உருவத்திலே நடமாடற தெய்வம்னா தெய்வம். அவருமட்டும் உடனே ரத்ததானம் செய்யல்லேன்னா, உன் புள்ள கண்ணம்மாவை நீ உசிரோடே பார்க்க முடி யாது?’ என்று கூறிக் கொண்டுவரும் போதே ராமன் இடைமறித்துக் கேட்டான்:

என்ன பொன்னி, புதிசு புதிசா விஷய மெல்லாம் பேசறே???