பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

110

    • ஆறுமுகம் இப்போச் சொன்னியே ஒரு வார்த்தை. குடம் பாலிலே துளி விஷம் கலந்த மாதிரி மதுவுக்கு ஒருத்தன் அடிமையாயிட்டா, அதன் பிறகு அவனிடமுள்ள எந்த உயர்ந்த குண மும் சோபிக்க முடியாது. -

அவனை நம்பி எந்தப் பொறுப்பான காரியத் தையும் ஒப்படைக்க யாரும் முன் வரமாட்டாங்க ஒப்படைத்தாலும் அவனால் அதைத் திறமை யாகச் செய்து முடிக்க முடியாது. r

சுருக்கமாகச் சொன்னால், குடிக்கப் போகிற ஒருவன் முதன் முதலில் தன் அறிவைத் தான் அடகு வைக்கிறான். குடிப்பழக்கத்திற்கு அடிமை 'யானவனிடம், அது வரை இருந்து வந்துள்ள, அன்பு, இரக்கம், வீரம், நேர்மை, செயல்திறன், உழைப்பு, விடாமுயற்சி, உயர்ந்த லட்சியங்கள் ஆகிய அனைத்தும், அவன் குடிக்கத் தொடங்கிய வுடனே, ஒன்றன் பின் ஒன்றாக அவனிடமிருந்து விடை பெற்று விலகிச் சென்று விடுகின்றனர். எல்லா உயர் குணங்களையும் அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு; அவனுடைய மனைவி, மக்கள், என்கிற அன்பான குடும்பத்தையும் உருக் குலைத்து விட்டு; இத்தனையும் போதாது என்று மது அரக்கன் சிறுகச் சிறுக அவனது உயிரையும் குடித்துத் தன் பசியைத் தீர்த்துக் கொள்கிறான். இதை யாரும் மறுக்க முடியாது.