பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

103


அந்துவன் கால்வழி அரசர்கள்
(திரண்ட நோக்கு)

அந்துவன் கால்வழியில் தோன்றி அரசாண்ட அரசர்கள் என்று தெளிவாக நமக்குத் தெரியவருபவர் நான்கு பேர். அவர்களது வரலாற்றைத் தனித்தனியே முன்பு கண்டோம். இனி, அவர்களது உறவு முறைகள், அவர்கள் ஆண்ட நாடு, அவர்கள் செய்த போர்கள். முதலானவற்றை ஒருங்கிணைத்து ஆய்வுக் கண்ணோட்டத்தில் நோக்க வேண்டும். அடுத்துத் தரப்பட்டுள்ள அட்டவணை அவர்களுடைய உறவு முறையைத் தெளிவாக்கும்.


அந்துவற்கு ஒரு தந்தை ஈன்ற மகன் பொறையன் பெருந்தேவி ஈன்ற மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன்
செல்வக்கடுங் கோவுக்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன் பெருஞ் சேரல் இரும் பொறை
குட்டுவன் இரும் பொறைக்கு மையூர் கிழான் வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்ற மகன் இளஞ் சேரல் இரும் பொறை

இந்தப் பட்டியலில் வேளாவிக் கோமான் பதுமன் தேவியை அதாவது, பதுமனது மகளை செல்வக்கடுங்கோ மணந்தான் என்பதை அறிகிறோம். முன்பு உதியன் கால்வழி அரசர்களது வரலாற்றைத் திரட்டி நோக்கியபோது வேளாவிக்கோமான் பதுமன் தேவியை (அதாவது, பதுமனது மகளை) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மணந்தான் என்று அறிந்தோம். எனவே, பதுமனின் பெண்மக்கள் இருவரை முறையே நெடுஞ்சேரலாதனும் செல்வக் கடுங்கோ வாழியாதனும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது தெரியவருகிறது. இதனால் இவர்கள் இருவரும் சமகாலத்தவர் என்பது தெளிவாகும்.

முன்பு செங்குட்டுவனது காலத்தை அடிப்படையாகக் கொண்டு உதியன் கால்வழியில் தோன்றி அரசாண்ட அரசர்களது காலத்தை