பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

133


சிறந்தவர்களுக்குக் 'காவிதி'ப் பட்டமும் வாணிகத்தில் சிறந்தவர்களுக்கு ‘எட்டி'ப் பட்டமும் இவ்வாறு சிறப்புக் கருதித் தமிழ்நாட்டில் வழங்கப் பட்ட பட்டங்களாகும். இந்தக் குட்டுவனுக்கு அளிக்கப்பட்ட இந்தப் பட்டத்தில் ‘சோழிய' என்னும் அடைமொழி உள்ளது. இதனால், இந்தப் பட்டத்தை அளித்தவன் சோழ அரசன் என்பது தெளிவாகத் தெரிகிறது. சோழன், சேரனுக்கு இத்தகைய பட்டம் அளித்துச் சிறப்பிக்கக் காரணம்

என்ன?

இந்தக் குட்டுவன் சோழரது படைத் தலைமை பூண்டு சிறப்புடன் போராடிச் சோழனுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்க வேண்டும். இதனால் இவன் இந்தச் சிறப்புப் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் படைப்பணியை இவன் தனது இளமைக் காலத்தில் ஆற்றியிருக்கலாம். சோழன் பாராட்டிப் பட்டம் வழங்கியதோடு தன் சார்பாக அல்லது தனக்குத் துணையாக வெண்குடையில் இருந்து கொண்டு ஆளும்படி அமர்த்தியிருக்கலாம். வெண்குடை மக்கள் அவனது நற்பண்புகளை எண்ணி அவனைத் தம் ஊர் 'கிழவோன்' என்று ஏற்றுக் கொண்டிருக்கலாம். இவ்வாறு இவன் 'வெண்குடை கிழவ'னாக விளங்கினான்.

இந்தப் பட்டத்தை இவனுக்கு வழங்கிய சோழன், சேட் சென்னி (இலவந்திகைப் பள்ளியில் இறந்தவன்) என்பதை ஏனாதி திருக்கிள்ளி வரலாற்றில் காணலாம்.