பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

161


காப்பியாற்றுக் காப்பியனார் என்பவர். “பாடிப்பெற்ற பரிசில்: நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதில் பாகங்கொடுத்தான் அக்கோ.”

பெருஞ்சேரல் இரும்பொறை (தாயாதி அண்ணன்)

இவன் செங்குட்டுவனின் தாயாதி அண்ணன், இளைய கால் வழியில் வந்த செல்வக்கடுங்கோ வாழி யாதனின் மகன் இவன். இவனும் நார்முடிச் சேரலின் காலத்தில் இருந்தவன். இடையர் குலத்தில் பிறந்த கழுவுள் என்பவன் குறும்பு செய்து கொண்டிருந்ததை இவன் அடக்கினான்.

ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப் பதிபாழாக வேறுபுலம் படர்ந்து

(8ஆம் பத்து. 1: 17-18)

அந்தக் கழுவுள் எந்த நாட்டில் இருந்தான் என்பது தெரிய வில்லை. இவன் யாகங்களைச் செய்தான் என்று கூறப்படுகிறான் (8ஆம் பத்து. 4) தன்னுடைய புரோகிதனாகிய நரைமூதாளனைத் துறவு கொள்ளும்படிச் செய்தான்.

முழுதுணர்ந்த தொழுக்கும் நரைமூ தாளனை வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவமுடையோர்க் கென

வேறுபடு நனந்தலைப் பெயரக்

கூறினை பெருமநின் படிமை யானே

(8ஆம் பத்து. 4 : 24-28)

கொங்கு நாட்டில் அதிகமான் அரசர்கள் ஆண்டுவந்த தகடூரை

இவன் வென்றான்.

வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்

வில்பயில் இறும்பிற் றகடூர் நூறி

(8ஆம் பத்து. 8:8-9)

இவன் காலத்தில் தகடூரை ஆட்சி செய்தவன் அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன். நெடுமான் அஞ்சி, அதிகமான் நெடுமிடல் அஞ்சியின் மகன். நெடுமிடல் அஞ்சி, பெருஞ்சேரல் இரும்பொறை யின் தமயனான நார்முடிச்சேரலினால் வெல்லப் பட்டவன். பிறகு அவன் துளு நாட்டு நன்னனுடன் போர் செய்து மாண்டான். அவன்