பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




172

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1

(பழைய உரை: வாலிழை கழிந்த பெண்டிர் என்றது அப்பழையன் பெண்டிரை. கூந்தல் முரற்சி என்றது, அவர் கூந்தலை அரிந்து திரித்த கயிற்றினை, குஞ்சர ஒழுகை பூட்டியது அப்பழையன் வேம்பினை ஏற்றிக் கொண்டு போதற்கு.

பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு

வேம்பு முதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப்

போந்தைக் கண்ணி பொறைய

(சிலம்பு 27 : 124-126)

என்று இப்போர்ச் செய்தியை இளங்கோவடிகள் கூறுகிறார். செங்குட்டுவனுடைய மோகூர்ப் போர் இவ்வளவு பெருமை யடைந்ததற்குக் காரணம் என்ன வென்றால், மோகூர் பழையனுக்கு உதவியாகப் பாண்டியனும் சோழனும் வேறு சில வேளிர்களும் வந்து செங்குட்டுவனுடன் போர் செய்தபடியால் தான். ஆகவே, செங்குட்டுவன் பலமான எதிர்ப்பைத் தாங்கி வெல்ல வேண்டிய தாயிருந்தது.

குறிப்பு : மோகூரின் மேல் மோரியர் படையெடுத்து வந்து போர் செய்தனர் என்றும் கூறப்படுகிறது. வம்பமோரியர், மோகூரின் மேல் படையெடுத்து வந்ததற்குச் சான்று மாமூல னாரின் அகப்பாட்டு. (அகம் 251). இச்செய்யுளில் மாமூலனார்,

வெல் கொடித்

துனைகா லன்ன புனைதேர்க் கோசர் தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த

மாகெழு தானை வம்ப மோரியர்

புனைதேர் நேமி யுருளிய குறைத்த

இலங்குவெள் ளருவிய அறைவாய் உம்பர்,

(அகம் 251:6-14)

என்று கூறுகிறார். மோரியர் (மௌரியர்) மோகூரின் மேல் படையெடுத்து வந்ததைப் பற்றி (அகம் 281 : 7-12, 69 : 10-12, 62 : 10-11; புறம் 175 : 6-8) வேறு சில செய்யுட்களும் கூறுகின்றன. ஆனால்,