பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்
177
என்று சிலம்பு (காட்சிக்காதை 160 - 161) அடிகளுக்கு உரை எழுதுகிற அரும்பத உரையாசிரியர், 'எங்கோமக ளென்றது, செங்குட்டுவன் மாதாவை; அவளை இவன் கொண்டுபோய்த் தீர்த்தமாட்டினதொரு கதை' என்று எழுதுகிறார். அரும்பத உரையாசிரியர், தீர்த்தமாட்டினதொருகதை என்று எழுதியிருப்பதை நீலகண்ட சாஸ்திரியார், அது பொய்க் கதையென்று அரும்பத உரையாசிரியர் கூறியதாகப் பொருள் செய்துகொண்டார்[1]. சரித்திரங்களையும் கதை என்று கூறுவது அக்காலத்து வழக்கம். தேசிங்குராஜன் கதை, கட்டபொம்மன் கதை, முத்துப்பட்டன் கதை, மதுரைவீரன் கதை என்றுதான் கூறப்படுகிறதே தவிர, தேசிங்குராஜன் சரித்திரம், கட்டபொம்மன் சரித்திரம், முத்துப்பட்டன் சரித்திரம் என்று கூறப்படவில்லை. கதை என்று கூறப்படுவதனாலே தேசிங்குராஜன், கட்டபொம்மன் முதலியவர்களைப் பொய்யாகப் புனைந்துரைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் என்று சாஸ்திரியார் கருதுகிறாரா? இராமாயணக் கதை, பாரதக் கதை என்றுதான் வழங்கப்படுகின்றன. அவையும் இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளன. அரும் பதவுரையாசிரியர் கதை என்று எழுதியதன் கருத்து 'ஒரு வரலாறு' என்னும் பொருளுடையது. சாஸ்திரியார் கருதுவதுபோல பொய்க்கதை என்று பொருள் கொள்வது தவறு. அது உண்மைச் செய்தியே.
செங்குட்டுவன் தன் தாயை உயிருடன் கங்கைக் கரைக்கு நீராட்ட அழைத்துச் சென்றிருந்தாலும் அல்லது இறந்துபோன அவள் எலும்புகளைக் கங்கையில் போடச் சென்றிருந்தாலும் அவன் அதன் பொருட்டுக் கங்கைக்குச் சென்றது உண்மையே. செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோ அடிகளே இதனைக் கூறுவதனால் இதை உண்மை என்றே கொள்ளலாம். சாஸ்திரியார், சிலப்பதிகாரத்தைப் புனைகதை என்று கூறுவதற்கு எத்தனையோ தவறான சான்றுகளைக் காட்டுகிற வகையில் இதையும் ஒரு சான்றாகக் கொண்டார். எனவே, செங்குட்டுவன் கங்கையில் நீராட்டினான் என்பது நிகழ்ந்திருக்கக் கூடிய நிகழ்ச்சியே. இது செங்குட்டுவன் இளவரசனாக இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி.
செங்குட்டுவன் தன் முதிர்ந்த வயதில் இரண்டாம் முறையாகக் கங்கைக்குச் சென்றது கண்ணகிச் சிலை செய்யக் கல்கொண்டு
- ↑ * P. 524, A Comprehensive History of India, Vol. Two. 1957.