பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர்

மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழானைப் புரையறு கேள்விப் புரோசு மயக்கி.

183

என்று 9ஆம் பத்துப்பதிகம் கூறுகிறது. இதற்குப் பழைய உரை, 'அமைச்சியல் மையூர்கிழானைப் புரோசு மயக்கி யென்றது தன், மந்திரியாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும் அறநெறி அறிவானாகப் பண்ணி யென்றவாறு என்று விளக்கங் கூறுகிறது.

"

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினான்கு ஆண்டு வீற்றிருந்தான் என்று 9ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது.

இளஞ்சேரல் இரும்பொறை செங்குட்டுவனுக்கு முன்னமே, செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்னமே இறந்து போனான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து

மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும் மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின் யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்

என்று சிலம்பு, நடுகற்காதை (147-150) கூறுகிறது காண்க.

(வஞ்சிமா நகரத்தில் சதுக்கப்பூதரை அமைத்தவன் இளஞ் சேரல் இரும்பொறை என்று முன்னமே கூறினோம்). இதனை யறியாமல் திரு. நீலகண்ட சாஸ்திரியார், செங்குட்டுவனுக்குப் பிறகும் இளஞ்சேரல் இரும்பொறை உயிர்வாழ்ந்திருந்தான் என்று கூறுகிறார். செங்குட்டுவன் உத்தேசம் கி.பி. 180-லும், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை உத்தேசம் கி.பி. 190-லும இருந்தனர் என்று இவர் கூறுவதனால் இது தெரிகிறது (pp. 522, 589, A Comprehensive History of India. VolII, K.A. Nilakanta Sastri, 1957.) செங்குட்டுவன் உயிரோடு இருக்கும் போதே இறந்துபோன இளஞ்சேரல் இரும்பொறை அவனுக்குப் பிறகு எப்படி உயிர் வாழ்ந்திருக்க முடியும்? இளஞ்சேரல் இரும்பொறை இளமை யிலேயே போர்க்களத்தில் இறந்து போனான்போலும்.

செங்குட்டுவன் ஆட்சி

செங்குட்டுவன் காலத்தில் சேர இராச்சியம் பெரியதாக இருந்தது. சேரநாடும் கொண்கான (துளு) நாடும், கொங்கு நாட்டின் பெரும்பகுதியும் இவனுடைய சேர இராச்சியத்தில் அடங்கியிருந்தன.