பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழக வரலாறு -சேரர், சோழர், பாண்டியர்

மேவரு சுற்றமோடு உண்டினிது நுகரும்

தீம்புனல் ஆயம்.

(5ஆம் பத்து. 8 : 13-17)

189

("பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை யென்றது வேனிற் காலத்து மனையில் வைகாது பொழில்களிலே வதியும் பெரிய செல்வ அழகையுடைய இல்வாழ்க்கை யென்றவாறு.... இச்சிறப்பானே, இதற்குப் (இச்செய்யுளுக்கு) 'பேரெழில் வாழ்க்கை' என்று பெயராயிற்று' பழைய உரை.)

இவனுடைய வேனிற்காலப் பொழில் வாழ்க்கையை இளங்கோவடிகளும் கூறுகிறார்.

வானவர் தோன்றல் வாய்வாட் கோதை விளங் கிலவந்தி வெள்ளி மாடத்து இளங்கோ வேண்மாள் உடனிருந் தருளித் துஞ்சா முழவின் அருவி யொலிக்கும் மஞ்சுசூழ் சோலை மலைகாண்குவ மெனப் பைந்தொடி ஆயமொடு பரந்தொருங் கீண்டி வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்’

..

...

..

...

..

நெடியோன் மார்பில் ஆரம் போன்று

பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப

(சிலம்பு - காட்சி: 3-23)

வழக்கம்போல ஓராண்டு வேனிற் காலத்தில் இவ்வாறு பொழிலில் தங்கியிருந்தபோது தான் செங்குட்டுவன் கண்ணகியின் செய்தியைக் குன்றம் வாழும் மக்கள் சொல்லக் கேட்டறிந்தான். அப்போதுதான் அவனுக்குக் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைக்கும் எண்ணம் தோன்றியது.

இசைவாணர்களையும் ஆடற் கலைஞர்களையும் இவன்

ஆதரித்தான்.

ஆடுசிறை யறுத்த நரம்புசேர் இன்குரல்

பாடு விறலியர் பல்பிடி பெறுக

துய்வீ வாகை நுண்கொடி யுழிஞை