பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




216

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1

பாண்டிய அரசர்

பசும்பூண் பாண்டியன்

நெடுஞ்செழியன் - 1

(ஆரியப்படை கடந்தவன், அரசுகட்டிலிற் றுஞ்சியவன்)

வெற்றிவேற் செழியன் (சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்)

நெடுஞ்செழியன் - 2

(தலையாலங்கானத்துச் செரு வென்றவன்)

சோழ அரசர்

கி.பி. 2ஆம் நூற்றாண்டில் சோழ அரசர் குடியில் பிறந்த சில அரசர்கள் சோழ நாட்டின் வெவ்வேறு பகுதிகளை யரசாண்டனர். அவர்கள் அடிக்கடி தங்களுக்குள் போர் செய்து கொண்டிருந் தார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த பேர்பெற்ற சோழ அரசன் உருவப் பஃறேரிளஞ் சேட் சென்னி என்பவன். இளஞ்சேட் சென்னியும் இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனும் (இவன் செங்குட்டு வனின் தந்தை) சமகாலத்தில் இருந்த அரசர்கள். இவ்விருவரும் போர் என்னும் இடத்தில் போர் செய் தார்கள். அந்தப் போர்க்களத்தில் இவ் விருவரும் புண்பட்டு விழுந்து சிலகாலம் உயிர் போகாமல் கிடந்து பிறகு இறந்துபோனார்கள். அப்போது அவர்களைப் போர்க்களத்தில் கழாத்தலையார், பரணர் என்னும் புலவர்கள் பாடினார்கள் (புறம். 62, 63, 368).

வேற்பஃறடக்கைப் பெருவிற்கிள்ளிக்குப் பிறகு கரிகாற் பெரு வளத்தான் என்னும் சோழன், முடிசூடி அரசாண்டான். அவன் ஆட்சிக்கு வராதபடி அவனுடன் சோழகுலத்து அரசர் ஒன்பது பேர் போர் செய்தார்கள் (பட்டினப்பாலை 220, 227). அவர் களைக் கரிகாலன் வாகைப் பெருந்தலை என்னும் இடத்தில் வென்றான். அந்த ஒன்பது தாயாதியரசர்களைக் கரிகாலன் வென்று சோழநாட்டை யரசாண்டான். (அகம். 125 : 16-21). கரிகாற் பெருவளத்தான் தொண்டை நாட்டை யரசாண்ட தொண்டை மான் இளந்திரையன் என்பவனையும் வென்று தொண்டை நாட்டைச் சோழ இராச்சியத்தோடு இணைத்துக் கொண்டான். இதைப் பட்டினப்பாலை,