பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




256

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1

கூறினாள். ஆனால், அவள் கூறிய அறவுரைகள் அவன் மனத்தில் ஏறவில்லை. அவன் அடிக்கடி அவளிடம் வரத்தலைப்பட்டான்.

மணிமேகலை உலகவறவியில் ஏழை எளியவருக்கு நாள் தோறும் உணவு கொடுத்து வருவதைச் சோழ அரசனான மாவண்கிள்ளி அறிந்தான். அவன் மணிமேகலையை யழைத்து அவள் செயலுக்கு மெச்சிப் புகழ்ந்து 'உனக்கு நாம் செய்ய வேண்டுவது என்ன?' என்று கேட்க, மணிமேகலை சிறைக் கோட்டக் கட்டிடத்தை அறக்கோட்ட மாக்க வேண்டும் என்று கூறினாள். அரசன் அவள் சிறைக் கோட்டத்தை அவளுக்குக் கொடுத்தான். அவள் அதைப் பௌத்த மதத்தாரிடம் ஒப்படைத்து அங்கு ஏழைகளுக்கு இலவச மருத்துவச் சாலையை ஏற்படுத்தினாள். அம்மருத்துவச்சாலையில் மருத்துவம் அறிந்த புத்த பிக்ஷுக்கள் நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து கொடுத்து நோய் தீர்த்துக்கொண்டிருந்தனர்.

இளவரசனாகிய உதயகுமாரன் அடிக்கடி தன்னிடம் வந்து உரையாடுவது மணிமேகலைக்கு மனத் துன்பத்தை உண்டாக்கியது. அவள் தன்னிடம் வருதைத் தடுக்க எண்ணி, தன் முகத்தைக் கருஞ் சாயம் பூசிக் காயசண்டிகைபோலக் காணப்பட்டாள். ஆனாலும், உதய குமாரன் ஒரு நாள் மாலையில் அவளிடம் வந்து உரையாடினான். அப்போது காயசண்டிகையின் கணவன், தன் மனைவியைக் காண வெளிநாட்டிலிருந்து வந்தவன், உலகவறவி யில் வந்தான். மணி மேகலையிடம் உதயகுமரன் உரையாடிக் கொண்டிருப்பதை அவன் கண்டான். மணிமேகலையைத் தன் மனைவியான காயசண்டிகை என்று அவன் கருதிக்கொண்டான். தான் வந்திருப்பதையும் கவனி யாமல் தன் மனைவியான காயசண்டிகை யாரோ புதிய இளைஞனிடம் பேசிக் கொண்டிருக் கிறாள் என்று அவன் எண்ணினான். காய சண்டிகையும் மணி மேகலையும் ஒரே உருவமாக இருந்தபடியாலும் அவன் அவளைத் தன் மனைவியான காயசண்டிகை என்றே கருதிக் கொண்டான். தன் மனைவியின் செயலைப்பற்றி மனம் கொதித்தான். அவளுடைய காதலனான அந்த வாலிபனை (அவன் அரசகுமாரன் என்பது அயல்நாட்டவனாகிய அவனுக்குத் தெரியாது) எப்படி யாவது கொன்றுவிடுவது என்று வைரங் கொண்டான். கடுஞ்சினத்தோடு அவன் அன்றிரவு உலகவறவியண்டைப் பதுங்கியிருந்தான்.