பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




320

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1

கொண்டே போரைக் கண்டிருக்கிறார்.3 எனவே, அவர் கண்ட போர் பெருங்கோழியூரில் நடைபெற்றது என்பது தெளிவாகிறது. உறை யூருக்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு. பேரரையும் சிற்றரையும் என்பன ஓர் ஊரின் பகுதிகளாய் விளங்கியமை போலப் பெருங் கோழியூர் என்பது கோழியூரின் ஒரு பகுதியாய் விளங்கியிருக்கலாம். இந்த வகையில் இப் போர் உறையூரில் நடந்தது என்று கொள்கிறோம். உறையூரைக் கைப்பற்ற வந்தவன் யார்? 'பொருநன்' என்று பாடல் கூறுகிறது.4

தலையாலங்கானத்துப் போரில் நெடுஞ்செழியனை எதிர்த்த எழுவருள் ஒருவன் ‘பொருநன்' என்னும் பெயர் கொண்டவன். இந்தப் பொருநன் தான் இந்தத் தாக்குதலைச் செய்தவனா என்று எண்ண இயலாது. தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் காலத்தால் மிகவும் பிற்பட்டவனாவான்.

உறையூரில் அப்போது ஆட்சி செலுத்தி வந்தவன் தித்தன் என்பவன். பொருநன் உறையூரைத் தாக்கியபோது தித்தனுக்குப் போர்வை அரசன் பெருநற்கிள்ளி உதவ முன்வந்தான். இந்த உதவியைத் தித்தன் விரும்பவில்லை. எனினும் சோழ நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்பது கிள்ளியின் விருப்பம்.

பொருநனுக்குச் சோழர் குடியைச் சேர்ந்த வேறொருவன் நண்பன். அவன் பெயர் செம்பியன். இந்தச் செம்பியனுக்கும் இந்தப் போருக்கும் தொடர்பு இல்லை. என்றாலும் அந்தச் செம்பியனுக்குச் சோழ நாட்டுத் தலைமையை அளிக்க அவன் செய்த முயற்சியே, இந்த உறையூர்ப் போராய் இருக்குமோ என்று எண்ண வேண்டியுள்ளது.

போரில் பெருநற்கிள்ளியின் கைகள் விரைந்து செயற்பட்டன. இவன் போர்க்களம் புகுவான் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. எதிர்பாராமல் இவன் போர்க்களத்தில் தோன்றினான். பொருநனின் போர் வீரர்கள் வெருண்டு ஓடினர்.

3. 604 85:6

4. 609 82:5

5. அகம். 36:19-20

6. புறம். 80:6

7. ஷ80:5 - 9 ஆமூர்ப் போர் 8. அகம். 36 : 15 9. புறம். 82:3 - 4 10.ஷை 84: 3 - 5