பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர்

கொடை

333

ஊன் பொதி பசுங்குடையார் என்னும் புலவர் தடாரி என்னும் இசைக்கருவியை முழக்கிக்கொண்டு போர்க்களத்திற்குச் சென்று, அவனது வெற்றியைச் சிறப்பித்துப் பாடினார். அவனது பட்டத்து யானையைப் பரிசிலாகக் கேட்டார். சோழன் கொடுத்திருப்பான் என்று நாம் கருதலாம். இப் போர்க்களிற்றைப் பரிசிலாகப் பெற்றுக் கொள்வதன் மூலம் இனிமேல் கொடிய போர்களில் அவன் ஈடுபடக்கூடாது என்பதைப் புலவர் குறிப்பால் உணர்த்தினார் போலும்.10

இளஞ்சேட்சென்னி

-

3

நாடு

போர்

(உருவப்பஃறேர்)11

இவன் நாடு மழைவளம் குன்றினும் நீர்வளம் குறையாது.

போர்களில் ஈடுபட்டதால் இவனது வாள் மழுங்கிக் குருதிக்கறை படிந்திருந்தது. இவனது தாளிலிருந்த வீரக்கழல் போர்க் களத்தில் நடந்ததால் குருதிக்கறை படிந்திருந்தது. மார்புக் கவசம் பல துளைகளை உடையதாய் இருந்தது.12 புலிபோன்ற இவனது குதிரைகள் கடிவாளம் பூண்டு சிவந்த வாயை உடையன. எமன்போன்ற இவனது யானைகள் கதவைக் குத்திக் கோடுகளின் நுனி மழுங்கப் பெற்றிருந்தன. இவ்வாறு இவனது படைகள் கூறப்படுவதால் இவன் பல போர்களில் ஈடுபட்டான் எனத் தெரிகிறது.

கொடை

பெருங்குன்றூர்கிழார் என்னும் புலவர், விருந்தினரைக் கண்டால் ஒளிந்து கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் தன் வறுமை நிலையை விளக்கிக் கூறிப் பரிசில் தரும்படி இவனை வேண்டினார். இவன் பரிசில் நல்கினான் என்று கருதலாம்.13

10.புறம்.370 : 18-21

11. 609 266

12. ஷை 4:1-7

13. ஷை 266:10 - 13