பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர்

377

பூட்சேய்2 என்ற முறையில் ஓரளவு பொதுவகையாலும் வெற்றிபெற்ற சோழ அரசன், 'களவழி' நூலில் குறிக்கப்படுகிறானே அன்றிச் சோழன் செங்கணான் என்று குறிக்கப்படவில்லை. மால் (திருமால்) என்றும், சேய் (முருகன்) என்றும் இவன் குறிப்பிடப்படுவது மனிதன் மீது கடவுள் தன்மை ஏற்றப்பட்ட நிலையாகும், மற்றும், 'செங்கண் மால்', 'செங்கட் சினமால்' என்னும் பெயர்களை நோக்கும்போது போர்க் காலத்தில் சினம் மிகுதியால் சிவந்திருந்த கண் நோக்கிய தெளிவுரைப் பெயரே அன்றிச் சோழன் செங்கணான் என்று சங்ககால இயற்பெயர் போன்றது அன்று. மற்றும் 'செங்கணான் கோச்சோழன்' என்று திருமங்கை ஆழ்வாரால் குறிப்பிடப்படுபவன் சிவபெருமானுக்கு 70 கோயில்கள் கட்டியவன். இவர்கள் மூவரும் வெவ்வேறு அரசர்கள். வரிசைப் படி காலத்தால் வேறுபட்டவர்.

இந்தச் சோழனை எதிர்த்துப் போரிட்ட அரசனின் பெயரைப் புறநானூற்றுக் கொளு, கணைக்கால் இரும்பொறை' என்று குறிப்பிடுகிறது. களவழியில் சோழனது பெயர் குறிப்பிடப்படாதது போலவே, சோழனை எதிர்த்துப் போரிட்டவனின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. 'வஞ்சிக்கோ'13 என்று பொதுவகையால் ஓரிடத்தில் குறிப்பிடப்படுகிறான். மற்றோரிடத்தில் 'கொங்கர் படையைக் கொண்டவன்4 என்று குறிப்பிடுகிறார். மற்றும், பகைவர் என்றும் பிறவாறும் பொருள் தரக்கூடிய பல சொற்களால் (அடங்கார், உடற்றியார், ஒன்னார், காய்ந்தார், கூடார், செற்றார், தப்பியார், தெவ்வர், நண்ணார், நேரார், பிழைத்தார், புல்லார், மேவார்) சோழனை எதிர்த்தவர் குறிப்பிடப்படுகின்றனர். மற்றும் சங்க காலத்தில் செங்கணானை எதிர்த்தவன் கணைக்கால் இரும்பொறை என்று மட்டும் தெரிய வருகிறது. களவழியிலோ தெவ்வேந்தர்,15 வேந்தர்" என்றெல்லாம் பல்வேறு அரசர்கள் சோழனை எதிர்த்த தாகக் குறிப்புள்ளது. திருமங்கை ஆழ்வார் குறிப்பிடும் சோழன் எதிரி ‘கழல் மன்னர்’17 12.ைெஷ 34: 4 - 5

13. 609 39: 4 14. 6029 14:4

15.ஷை 6:5- 6

16. 609 16:5

17. 'கவ்வைமா களிறுந்தி வெண்ணி ஏற்றக் கழல்மன்னர் மணிமுடிமேல் காகம் ஏறத் தெய்வவாள் வலங்கொண்ட சோழன்' (பெரிய திருமொழி, 6-6-3)