பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




424

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1

செய்வித்தான்." இவ்விதம் பல வேள்விகளைச் செய்தமையால் இவன் ‘பல்யாகசாலை' என்னும் அடைமொழியுடன் வழங்கப்பட்டான்.

புலவர்களுக்குப் பொற்றாமரைப் பூக்களைப் பரிசளித்துச் சிறப் பித்ததும், புலவர்களுக்கு யானைகளையும், தேர்களையும் பரிசில் களாக நல்கியதும் இவனது கொடைகளில் நினைவுகூரத் தக்கவை.

பகைவர் நாட்டின் தேர் சென்ற தெருக்கள் எல்லாவற்றிலும் கழுதைகளைப் பிணைத்துத் திரியவிட்டதும். அறுவடை செய்யும் நிலையில் உள்ள விளைச்சல் வயல்களில் தன்னுடைய தேர்ப்படை யுடன் சென்று பாழாக்கியதும் இவன், தனது பகைவர்கள் நாட்டிற்குச் செய்த கொடுமையாகும். இஃது அக்காலப் போர் மரபாகக் கருதப் பட்டதுபோலும். முதுகுடுமி என்னும் இவனது பெயர் முதுமையை உணர்த்தும் நரைத்தலை முடி உடையவனாக இவன் விளங்கியதால் அமைந்திருக்கலாம். போரில் மிகுதியாகப் பழகியதால், இவனது மனைவிமார் ஊடல் கொண்டபோதும் அன்பாகப் பேசாமல் அடக்கு முறையைப் பின் பற்றி வந்தான். இதனால் மகளிர் சினந்தால், எதிராகச் சினங்கொள்ளக்கூடாது என்று புலவர் இவனுக்கு அறிவுரை கூறினார்.12

கானப்பேர் எயில் கடந்த உக்கிரப்பெருவழுதி3

இவனது பெயரை நமக்கு அறிவிப்பவர் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியரே ஆவர். அவர் ஓரிடத்தில் கடந்த என்னும் சொல்லாலும் மற்றோரிடத்தில் ‘தந்த' என்னும் சொல்லாலும் இவனைக் குறிப்பிடுகிறார். கானப்பேர் எயில்பற்றியும், அதனை வேங்கைமார்பன் என்பவன் ஆண்டதுபற்றியும், காவற்காடு. காவல் சிற்றூர்கள், ஆழ்ந்த அகழி, உயர்ந்த மதில், மீன் பூத்தன்ன ஞாயில் ஆகியவற்றைக் கொண் டிருந்த தன் கானப்பேர் எயில் கோட்டையைப் பறிகொடுத்துவிட்டு வேங்கைமார்பன் ஓலமிட்டு வருந்தியது பற்றியும் சங்கப் பாடல்களில் தெளிவான செய்திகள் உள்ளன. இந்த வெற்றி இவனது வரலாற்றில் மிகவும் சிறப்புடையதாய் விளங்கியதுபற்றி, இவன் 'கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி' என்று சிறப்பித்துக் கூறப்பட்டான்.

11. புறம். 15: 17 - 21 12. ஷை 20: 13 - 14 13.புறம்.21