பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


'சேரலர் வேந்து'

சேர நாட்டில் ஆங்காங்கே பல அரசர்கள் ஒரே காலத்தில் ஆட்சி செய்துவந்தனர். குட்ட நாட்டை ஆண்டவன் குட்டுவன் என்றும், குட நாட்டை ஆண்டவன் குடவர் கோமான் என்றும், பொறை நாட்டை ஆண்டவன் பொறையன் என்றும் பொதுப்படையாக வழங்கப்பட்டனர். இவன் ஒரு காலத்தில் இத்தகைய சேரர்குடி அரசர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கியமையால் இவன் 'சேரலர் வேந்து'[1] எனக் குறிப்பிடப்பட்டான்.

செல்வமிகுதி

இவனும் இவனது சுற்றத்தார்களும் செல்வத்தை வாரி வாரி வழங்கினர். எனினும் இவனது செல்வம் குறைவுபடவில்லை. அந்த அளவு மிகுதியான செல்வம் இருந்தது[2].

தூங்கெயில் என்பது ஒருவகைக் கோட்டை. அது வானம் என்னும்நகரில் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கோட்டையை அமைத்தவன் கடவுள் அஞ்சி என்பவன். அந்தக் கோட்டையின் காவலன் வண்டன் என்பவன் ஆவான். இந்தக் காவலை நாடு காவல் என்று கொள்ளலாம். அவன் பெருஞ் செல்வனாகவும் கொடையாளியாகவும் விளங்கினான். அந்த வண்டன்போல நார்முடிச் சேரலும் சிறந்து விளங்கினான்[3].

இவனது தந்தை 'ஆராத்திருவின் நெடுஞ்சேரலன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இதனால் இவன் தந்தை வழியே இவனுக்குக் கிடைத்த செல்வம் மிகுதி எனத் தெளிவாகிறது.

ஆட்சி

ஆளுந்திறமை, கொடை, வீரம் இவை அனைத்தும் ஒருங்கே பெற்றவன். மக்கள் மகிழ்வுடன் கடவுளை வழிபட்டு வாழும்படி இவன் நல்லாட்சி நடத்தினான்.

மனைவியின் மாண்பு

அவள் வானத்துச் செம்மீன் போலக் கற்புக்கடம் பூண்டவள்[4]. அவளது கற்பை அறக்கற்பு எனப் புலவர் கூறுகின்றார். அறக்கற்-


  1. ஷை 38 : 8
  2. ஷை 32 : 5 - 8
  3. ஷை 31 : 23
  4. பதிற். 31 : 27 – 28