72
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1
உதியஞ் சேரல் (நல்லினி)
┌───────────┴───────────┐
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்பல்யானைச் செல்
(குடவர்சேரமான் நெடுஞ்சேரலாதன்)கெழுகுட்டுவன்
(குடக்கோ நெடுஞ்சேரலாதன்)
(ஆராத்திருவின் சேரலாதன்)
│
┌────────────┬──────┴──────┬─────────┐
││││
களங்காய்க்கடல்பிறக்ஆடுகோட்(இளங்கோ
கண்ணிகோட்டியபாட்டுச்சேரஅடிகள்)
நார்முடிச்சேரல்செங்குட்டுவன்லாதன்
(தாய்(தாய்(தாய்(தாய்
வேளாவிக்சோழன்வேளாவிக்சோழன்
கோமான்மணக்கோமான்மணக்
பதுமன் தேவி)கிள்ளி)தேவி)கிள்ளி)
குட்டுவன் சேரல்
இந்த உறவுமுறையைச் செங்குட்டுவனை மையமாகக் கொண்டு காணின், செங்குட்டுவன் தலைமுறை, செங்குட்டுவனின் தந்தை தலைமுறை, செங்குட்டுவனின் பாட்டன் தலைமுறை செங்குட்டுவனின் மகன் தலைமுறை என்ற முறையில் நான்கு தலைமுறைகள் அமைகின்றன. இந்த நான்கு தலைமுறையினர் காலம் சுமார் 100 முதல் 150 ஆண்டுகள் என்று கொள்வது……
இலங்கைக் கயவாகு அரசன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலையமைத்து விழா எடுத்த போது வந்திருந்தான் என்று கூறப்படுவதைக் கொண்டு, விழா நடந்த காலம் கி.பி. 175 என்று கொள்ளலாம். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்த போது, அவன் அரியணையேறி ஐம்பது ஆண்டு நிறைவுற்றிருந்தது. எனவே, செங்குட்டுவன் அரியணை ஏறியது கி.பி. 125 எனத் தெரிகிறது. செங்குட்டுவன் 55 ஆண்டு அரசு வீற்றிருந்தான் என்று பதிகம் கூறுகிறது. எனவே, அவன் அரசாண்ட காலம் கி.பி. 125—180 எனக் கருதலாம். இவன் கால இறுதியில், கயவாகு வேந்தன் (கி.பி. 174—196) இலங்கையில் அரசாண்டான் எனத் தெரிகிறது.