பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


அரசன் நாடு தலைநகர் போரும் முடிவும்
12. கடம்பு எறிந்தான்.
13. இரண்டாம் முறையாக வடநாட்டுப் போரில் வென்று தன் தாயாரைக் கங்கையில் நீராட்டி வந்தான்.
14. மூன்றாம் முறையாக வடநாட்டில் போரிட்டுக் கனக விசயர் தலையில் கண்ணகிச் சிலைக்குக் கல் சுமத்திக் கொணர்ந்தான்.
ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் பொறை நாடு தொண்டி பந்தர், நறவு மலைநாட்டை வென்றான். தண்டாரணியப் போரில் வெற்றிபெற்று வருடை ஆடுகளை மீட்டுவந்தான்.

அந்துவன்

பதிற்றுப்பத்து நூலில் ஏழாம் பத்தின் தலைவனாகச் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளவன் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவனது தந்தை அந்துவன் என்னும் சேர அரசன்[1].

அந்துவனின் மனைவி 'பொறையன் பெருந்தேவி', இவள் ஒருதந்தை என்பவனின் மகள். பெருந்தேவி என்னும் வழக்கு பொதுவாக அரசியை உணர்த்தும். எனவே, இவளது பெயர் பொறையனுக்கு மனைவி என்று பொருள் தரும். இதனால் அந்துவன் பொறையர் குடி அரசன் என்பது தெளிவாகப் பெறப்படும். ஆகவே, புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 'சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை'[2] இந்த அரசனே என்பது பெறப்படும்.


  1. பதிற். பதி. 7 : 2
  2. புறம். 13