பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கள்ளரை நல்லவராக்கிய காத்தியானி

பகவன் புத்தருடைய முக்கியச் சீடர்களில் மகா கச்சானரும் ஒருவர். மகா கச்சாரும் ஒருவர். மகா கச்சானர் அவந்தி நாட்டிலே கூரராக நகரத்திலே சென்று அந்நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையின்மேல் தம்முடைய சீடர்களுடன் தங்கியிருந்தார். அவர் நாள் தோறும் அறவுரை கூறி விரிவுரை ஆற்றுவது வழக்கம். இவர் கூறும் நல்லுரையைக் கேட்பதற்காக நகர மக்கள் இவரிடம் திரண்டு வந்தார்கள்.

மகா கச்சான மகாதேரர் அருளிச்செய்யும் அறவுரைகளை நாள் தோறும் விடாமல் கேட்டு வந்தவர்களில் ஒரு வாலிபனும் ஒருவன். இவன் பெயர் சோணன் குட்டிக் கண்ணன் என்பது. செல்வம் கொழித்த குடும்பத்திலே பிறந்தவன். காத்தியானி என்னும் அம்மையாரின் மகன். முனிவரின் அறவுரைகளைக் கேட்டு வந்த இவனுக்குத் துறவியாக வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. ஆகவே, மகாகச்சான மகாதேரரிடம் சென்று தான்துறவியாக விரும்புவதாகவும் தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படியும் அவரிடம் கூறினான். செல்வஞ் செழித்த குடும்பத்திலே பிறந்து சுகவாழ்க்கை வாழ்ந்து பழகிய இவனுடைய நிலையையும் இளமை வயதையும் அறிந்த மகா கச்சானர், இவன் வேண்டுகோளை மறுத்தார். உற்றார் உறவினரை விட்டுத் தனியே இருப்பதும், தன்னந்தனியே இரந்துண்பதும், தனியே இருந்து மனத்தை அடக்கித் துறவு வாழ்க்கையைச் செலுத்துவதும் கடினமானது என்பதை அவனுக்கு விளக்கிக் கூறினார். சோணன் குட்டிக் கண்ணன் விடவில்லை; மீண்டும் சென்று தனக்குத் துறவுநிலையை அளிக்க வேண்டும் என்று வேண்டினான். மீண்டும் அவர் மறுத்தார். மற்றும் ஒரு முறை வேண்டினான். அப்போதும் மறுத்துவிட்டார்.

குட்டிக் கண்ணன் இளைஞனானபோதிலும் உறுதியான உள்ளம் உடையவன். ஆகவே, எப்படியாவது பௌத்தப் பிக்கு ஆகவேண்டும் என்று உறுதிசெய்து கொண்டான். அதனால், மறுபடியும் அவரிடம் சென்று கட்டாயம் தன்னைச் சீடனாக்கிக் கொள்ளும்படி வேண்டினான். இவனுடைய மனவுறுதியைக் கண்ட தேரர், ஒருவாறு இணங்கி,