பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

வணங்கினாள். மடியிலிருந்த அடையை எடுத்து, “பகவரே, இந்த அற்ப அடையை ஏற்றருள வேண்டும்” என்று வேண்டினாள்.

பகவர், திரும்பிப் பின்னால் நின்ற ஆனந்தர் என்னும் அணுக்கத் தொண்டரை நோக்கினார். குறிப்பையறிந்த ஆனந்தர், தமது சீவர ஆடையில் மறைத்து வைத்திருந்த திருவோட்டை எடுத்துப் பகவர் கையில் கொடுத்தார். பகவர் திருவோட்டை வாங்கிப் பூரணை யிடம் நீட்ட, பூரணை அதில் அடையை இட்டாள். அந்தத் திருவோடு பகவருக்கு ஒரு அரசன் அளித்தது. அரசன் அளித்த திருவோட்டிலே பரம ஏழையளித்த அடையைப் பகவர் ஏற்றுக்கொண்டார். பிச்சை ஏற்ற பகவர், தமது வழக்கப்படி, நன்றியறிதல் கூறுமுகத்தால் அம்மை யாருக்குச் சில அறவுரை களை வழங்கினார். அவற்றைக் கேட்ட அம்மையார் அவரை வணங்கினார்.

·

அப்போது பூரணைக்கு, ‘செல்வர்களும் சீமான்களும் நமது வீடுகளுக்கு அழைத்து அவர்கள் கொடுக்கும் நல்ல உணவுகளைச் சாப்பிடும் பகவர், இந்த அற்ப அரிசி அடையைச் சாப்பிடுவாரா!' என்ற ஐயம் உண்டாயிற்று.

பகவன் புத்தர் ஆனந்தரிடம், மரத்தினடியில் உட்கார வேண்டும் என்று கூறினார். ஆனந்தர், ஒரு சீவர ஆடையை மடித்து மரத்தின் நிழலில் தரையில் விரித்தார். பகவர் அதில் அமர்ந்து அடையை எடுத்து உண்ணத் தொடங்கினார். இதற்குள் ஆனந்தர் போய் ஆற்றிலிருந்து நீர் கொண்டுவந்து கொடுக்க, அதைக் குடித்துவிட்டுப் பகவர் எழுந்து, நகரத்திற்கு வராமலே தமது ஆராமத்திற்குத் திரும்பிப் போய்விட்டார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கொண்டிருந்த பூரணைக்கு மனத்திலே வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கின. தான் அளித்த அற்ப உணவாகிய வறட்டு அடையை அவர் சாப்பிட்டது. அம்மையாருக்குப் பெரிய வியப்பு. புத்தருக்கு உணவளிக்க வேண்டுமென்ற தன் எண்ணம் நிறைவேறியது அவருக்குப் பெருமகிழ்ச்சி.

பகவர் விருப்பு வெறுப்பு அற்ற உயர்நிலையையடைந்தவர். அவருக்கு அரசர் அளிக்கும் சுவைமிக்க பெருவிருந்துகளும் ஏழைகள் அளிக்கும் எளிய உணவுகளும் ஒரே தன்மையன.

3. இறைச்சி உணவு

எண்பது வயது நிறைந்த முதிர்ந்த வயதிலே பகவன் புத்தர் பிக்ஷு சங்கத்துடன் பாவாபுரிக்குச் சென்றார். சென்று அந்நகரத்தை

ס