பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

113

இசை பாடியும், நடனமாடியும் மனித இனம் மகிழ்ந்து வருகிறது. இசை நடனங்களை விரும்பாதவர் எவரும் இலர். எல்லா மக்களும் சையையும் கூத்தையும் விரும்புகிறார். வெறுப்பவர் எரும் இலர். ஆனால், மிக அபூர்வமாக, இசையையும் கூத்தையும் வெறுத்த ஒரே ஒரு ஆளைப்பற்றி வரலாற்றிலே படிக்கிறோம். அவர் மொகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப் அவர் கி.பி. 1657 முதல் 1707 வரையில், தில்லியில் இருந்து பாரத தேசத்தை அரசாண்டவர். ஔரங்கசீப் இசைக் கலையையும் நடனக் கலையையும் வெறுத்தாராம். இந்தக் கலைகளை அவர் ஆதரிக்கவில்லையாம்.

ஆகவே, இந்தக் கலைகள் அவருடைய அரண்மனையில் இடம்பெறவில்லையாம். அவருடைய ஆட்சிக் காலத்தில் இசையும் கூத்தும் ‘இறந்துவிட்டனவாம். ஆகவே, ஒரு நாள் இசைவாணரும் நடனக் கலைஞரும் ஒன்று கூடி சவப்பெட்டி யொன்றைத் தோளில் சுமந்து கொண்டு சாலைவழியே கூட்டமாக இடுகாட்டை நோக்கிச் சென்றார்களாம். அந்தச் சமயம் ஔரங்கசீப் மசூதியில் தொழுகை செய்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தாராம். கலைஞர்கள் பின் தொடர்ந்து வருகிற பெரிய சவஊர்வலத்தைக் கண்ட அவர், 'இறந்து போன பெருமகன் யார்? என்று வினவினாராம். 'இசைக்கலைப் பெரு மகள் இறந்துபோனாள், அவளைப் புதைக்க இடுகாட்டுக்குக் கொண்டு போகிறோம்' என்று அவர்கள் விடையளித்தார்களாம்.

அதுகேட்ட பாதுஷா ‘மீண்டும் எழுந்து வராதபடி அவளை ஆழமாகப் புதையுங்கள்' என்று கூறினாராம். இது வரலாறு கூறுகிற செய்தி. இசை நடனங்களை வெறுத்த இந்த ஒரு ஔரங்கசீப் பாதுஷாசைத் தவிர வேறு ஔரங்கசீப்கள் இருந்ததாக நமக்குத் தெரியவில்லை.

அல்லல், இன்னல், துன்பம், துயரம் சூழ்ந்த உலக வாழ்க்கை யிலே ஓரளவு இன்பந்தருவது இசையும் கூத்துமாகும். மனித குலம் சை பாடியும் கூத்து ஆடியும் மகிழ்ந்து வருகிறது. முற்காலத்தைவிட இக்காலத்தில் இசையும், கூத்தும் நாடகமும் பெரிதும் வளர்ந்து வருகின்றன. இசைச் சங்கங்களும் இசைக் கழகங்களும் நாடக அரங்கங்களும், வானொலி நிலையங்களும் திரைப்பட நிலையங் களும் இசை, கூத்து, நாடகங்களை வளர்த்து வருகின்றன. உலகத்திலே மனித குலம் உள்ளவரையில் இசையும் கூத்தும் நாடகமும் நடனமும் இருந்தே தீரும்.