பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

117

இந்திரனுடைய தேர்ப்பாகனான மாதலியின் மகன் சிகண்டியை அவள் காதலித்தாள். ஆகையால் பஞ்சசிகளை மணஞ் செய்து கொள்ள அவள் இணங்கவில்லை. பஞ்சசிகனோ பத்திரையை மணஞ்செய்து கொள்ளப் பெரிதும் விரும்பினான். கலைஞனான அவன் பத்திரை யிடத்தில் தனக்கிருக்கும் ஆழ்ந்த காதலை வெளிப்படுத்தி ஆழமான சில காதற்செய்யுட்களை எழுதினான். அந்தச் செய்யுட்களுக்குத் தானே இசை வகுத்தான். இசை வகுத்த பாடல்களைத் தன்னுடைய யாழில் அமைத்துப் பாடினான். அந்தப் பாடல்களில் காதல் செய்திகள் மட்டு மல்லாமல் பகவன் கௌதமபுத்தருடைய சிறப்புகளும் கலந் திருந்தன.

அவன், தான் பாடின அந்தச் செய்யுட்களை பத்திரை யிடத்தில் சென்று பாடினான். செம்மையாவும் அழகாகவும் இனிமையாவும் இருந்த அவனுடைய காதல் பாட்டுகள் அவளுடைய மனத்தைக் கவர்ந்தன. அந்தக் காதல் பாட்டுகளில் பகவன் புத்தரின் புகழையும் பாடியிருந்தபடியால், புத்தருடைய உபதேசங்களில் ஈடுபட்டிருந்த பத்திரைக்கு அப்பாட்டுகள் பெரிதும் மகிழ்ச்சியைத் தந்தன. இவனுடைய இசைப் பாடல் களைக் கேட்டு மகிழ்ந்த பத்திரை இவன்மேல் விருப்பங்கொண்டு இவனை மணஞ்செய்து கொள்ள இசைந்தாள். அதனால் பஞ்சசிகன் பெருமகிழ்ச்சியடைந்தான் இவ்வா றிருக்கும்போது, மண்ணுலகத்தில் உபதேசஞ் செய்து கொண்டிருந்த பகவன் புத்திரிடம் வந்து அவருடைய உபதேசங்களைக் கேட்க தேவேந்திரன் விரும்பினான். அதற்கு ஏற்ற சமயத்தை அறிந்து வரும்படி அவன் பஞ்சசிகனைப் பகவன் புத்தரிடம் அனுப்பினான். பஞ்சசிகன் புத்திரிடத்தில் வந்தபோது அவர் மகத நாட்டு இந்திர சாலைக் குகையில் தங்கியிருந்தார். அவர் தனியே இருப்பதை அறிந்த பஞ்சசிகன் அருகில் சென்று யாழ் இசைத்து இன்னிசை பாடினான். அவன் பாடின பாட்டு அவனுடைய காதற்பாட்டு தான். அந்தப் பாட்டில் புத்தருடைய புகழும் இருந்தது. அவன் வீணை வாசித்துப் பாடின இசைப் பாடல் தேவகானமாக மனத்தைக் கவர்ந்தது. பகவன் புத்தர் அந்த இசையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். அந்தப் பாடல்களை இயற்றியவர் யார் என்று அவனைக் கேட்டார். பத்திரையைக் காதலித்துத் தான் இயற்றின பாடல்கள் என்று அவன் அடக்கமாக வணங்கிக் கூறினான். பகவன் புத்தர் மகிழ்ந்து அவனை வாழ்த்தி யருளினார்.