பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

பிறகு, தான் வந்த காரணத்தைத் தெரிவித்து இந்திரன் அவரைச் சந்திக்கும் நோக்கத்தைக் தெரிந்துகொண்டு போய் இந்திரனிடம் சொன்னான். இந்திரன் பகவரிடம் வந்து வணங்கி அவரிடத்தில் உபதேசங்களைக் கேட்டுக்கொண்டு தன்னுடைய தேவலோகஞ் சென்றான். தனக்கும் பகவன் புத்தருக்கும் சந்திப்புச் செய்து கொடுத் ததற்காக இந்திரனுக்குப் பஞ்சசிகன் மேல் மகிழ்ச்சியுண்டாயிற்று. தேவேந்திரன், பஞ்சசிகன், பத்திரையைக் காதலிப்பதை அறிந்து அவனுக்கு அவளைத் திருமணஞ் செய்விக்க எண்ணினான்.

தேவலோகத்திலே பஞ்சசிகனுக்கும் பத்திரைக்கும் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. இசை நாடகக் கலைகளில் வல்லவர்களான இயக்கர்களும் கந்தவர்களும் மற்றும் தேவர்களும் திருமண விழா வுக்கு வந்து சிறப்பித்தார்கள் இசைக் கலை ஆசரியரும் பத்திரையின் தந்தையுமான தும்புரு எல்லோரையும் வரவேற்று உபசரித்தார். தேவேந்திரனும் திருமண விழாவுக்கு வந்து மணமக்களை வாழ்த்தி யருளினான். மணமக்களான பஞ்சசிகனும் பத்திரையும் இசைபாடி இனிது வாழ்ந்து வந்தனர். இரண்டு இசைவாணர்கள் வாழ்க்கைப் பட்டால் அவ் வாழ்க்கை இன்ப வாழ்க்கையாகத்தானே இருக்கும்.