பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

135

காரணம் என்பதை அறிந்தார். சபையை மதிக்காமல் இவ்வாறு தவறு செய்ததற்காக அவர்கள் மேல் சினங்கொண்டார். அகத்தியர் அவர்களுக்குச் சாபங்கொடுத்தார்.

66

'ஊர்வசி! நீ செய்த குற்றத்துக்காக விண்ணுலகத்தை விட்டு மண்ணுலகத்தில் போய்ப் பிறப்பாயாக.

وو

"சயந்த குமரா! உன் குற்றத்துக்காக நீயும் மண்ணுலகத்தில் சென்று மூங்கிலாகப் பிறப்பாயாக.” இதுதான் அகத்திய முனிவர் அவர்களுக்குக் கொடுத்த சாபம், சயந்த குமரன் தன் குற்றத்தை உணர்ந்து அகத்தியரை வணங்கி வேண்டினான்.

“முனிவரே எனக்குச் சாப விடை தரவேண்டும்” என்று இரந்து கேட்டான். அகத்தியர் மனமிரங்கினார்.

"மண்ணுலகத்திலே மலையின் மேலே நீ மூங்கிலாகப் பிறந்து வளரும்போது அந்த மூங்கிலிலிருந்து தலைக்கோல் அமைப்பார்கள். அப்போது உன் சாபம் நீங்கி உன் உருவம் ஏற்று விண்ணுலகத்துக்கு வருவாய்" என்று முனிவர் சாப விடை கொடுத்தார்.

சயந்த குமரன் (ஓவியச் சேனன்) மண்ணுலகத்திலே தமிழ் நாட்டு மலையிலே மூங்கிலாகப் பிறந்து வளர்ந்தான்.

முனிவருடைய சாபத்தைப் பெற்ற ஊர்வசி விண்ணுலகத்தி லிருந்து மண்ணுலகிலே தமிழகத்துச் சோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினத்தில் மாதவி என்னும் பெயருடன் பிறந்து நாடக மங்கையாக விளங்கினாள். ஆடல் பாடல் கலைகளில் தேர்ந்து உலகப் புகழ் பெற்று விளங்கினாள்.

சோழ மன்னன் அவளுக்குத் தலைக்கோல் பட்டங் கொடுக்க எண்ணினான். மலை மேல் வளர்ந்துள்ள மூங்கிலைக் கொண்டு வந்து தலைக்கோல் அமைக்கும்படி கட்டளை யிட்டான். மலைக்கு வந்து தலைக்கோலைத் தேடினவர் ஓரிடத்தில் கெட்டியான அழகுள்ள மூங்கில் வளர்ந்திருப்பதைக் கண்டார்கள். சாபத்தினால் சயந்த குமரன் மூங்கிலாகப் பிறந்து வளர்ந்த மூங்கில் அதுவே.

6

தலைக்கோல் அமைப்பதற்காகத் தகுதியான மூங்கில் இதுவே என்று கருதி அந்த மூங்கிலை வெட்டிக்கொண்டுபோய் அதனால் தலைக்கோல் செய்தார்கள். கெட்டியானதும் சாணுக்கு சாண் கணு