பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

147

அவர்கள் கொண்டிருந்த கருத்துக்கு இந்த நியமனம் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. 'நர்த்தகி’கள் இராஜ குமாரி கனகஸ்ரீயின் கன்னிமாடத்துக்குச் சென்று தங்கி அங்கே அவளுக்கு நடனக்கலையைக் கற்பித்து வந்தார்கள்.

கன்னிடமாடத்தில் ஊழியர்களாக இருந்தவர் எல்லோரும் பெண்களாகையாலும் ஆண்கள் அங்கு ஒருவரும் இல்லாத படியாலும் இவர்கள் அங்குத் தங்கியிருக்க நல்ல வாய்ப்பாக இருந்தது. கன்னிமாடத்தில் குமாரி கனகஸ்ரீ நடனக் கலையைக் கற்றுவந்தாள். ‘நர்த்தகிகள்' அவளுக்கு நடனக்கலையைக் கற்றுத்தந்து வந்தார்கள். நடனக் கலையைக் கற்பித்தபோது இடையிடையே அடிக்கடி அனந்த விஜயம் என்னும் தெய்வத்தைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். அனந்த வீரியன் என்னும் தெய்வம் நடனக் கலையில் முக்கிய இடம் பெற்றிருந்தது.

கனகஸ்ரீ நடனக் கலையைச் சில நாட்கள் கற்று வந்தாள். ஒரு நாள் கனகஸ்ரீ தன்னுடைய நடன ஆசிரியைகளான 'நர்த்தகி' களைக் கேட்டாள்: “அனந்த வீரியன் என்னும் தேவனைப் பற்றி பலவாறு பாராட்டிப் பேசுகிறீர்கள் அந்தத் தேவனை நான் இதற்கு முன்பு கேள்விப்படவில்லை. அது என்ன, அவ்வளவு சிறந்த தேவனா? அந்தத் தேவன் உண்மையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறுகிறீர்கள். அந்தத் தேவனை நான் பார்க்க முடியுமா? நீங்கள் அவனைக் காட்ட முடியுமா?”

66

'அப்படி ஒரு தேவன் உண்டு. அது உபாசகருக்குக் கண் கண்ட தெய்வம். அந்தத் தேவனுடைய மந்திரத்தை உச்சரித்தால் அந்தத் தேவனை நேரில் காணலாம்" என்றார்கள்.

“நான் அந்தத் தேவனை நேரில் காண விரும்புகிறேன்; எனக்கு அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுங்கள்” என்று கேட்டாள் கனகஸ்ரீ.

மூத்த ஆசிரியையான பர்பரை (அந்த வேடத்தில் இருந்த அபராஜிதன்) அவளுக்கு அனந்த வீர மந்திரத்தை ஓதிக் கொடுத்து, இந்த மந்திரத்தைத் தனியான ஒரு அறையில், யாருமில்லாத இடத்தில் இருந்து கண்ணை மூடிக்கொண்டு பக்தியோடு ஜெபிக்க வேண்டும். ஜெபித்த பிறகு கண்ணைத் திறந்துபார்த்தால் அனந்த வீரிய தேவன் எதிரே சுய உருவத்துடன் காட்சியளிப்பான் என்று கூறினான். கனகஸ்ரீ அந்தப்படியே ஓரறையில் தனிமையாக இருந்துகொண்டு கண்களை

6