பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

“இந்தப் பொடிகளை யாரிடமாவது காட்டுவோம். அவர்கள் எது நல்லது என்று கூறுகிறார்களோ அந்தப் பொடியே சிறந்தது” என்று சொன்னாள் குணமாலை. சுரமஞ்சரி அதற்குச் சம்மதித்தாள்.

சுண்ணப்பொடியில் வென்றவர்தான் ஆற்றில் நீராட வேண்டும், தோற்றவர் ஆற்றில் நீராடக்கூடாது என்று அவர்கள் பந்தயம் போட்டுக் கொண்டார்கள். தங்களுடைய சுண்ணங் களை யாரிடமாவது காட்டி அவர்கள் எது சிறந்ததென்று கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துவரும்படி தங்களுடைய தோழிமாரை அனுப்பினார்கள்.

குணமாலையின் தோழி மாலை என்பவளும் சுரமஞ்சரியின் தோழி கனகபதாகையும் நடுவரை நாடிச் சென்றார்கள். பணிப் பெண்கள் இரண்டு தட்டுக்களில் சுண்ணப் பொடிகளை வைத்துத் துணியினால் மூடி எடுத்துக்கொண்டு அவர்களைப் பின்பற்றிப் போனார்கள்.

ஆற்றங்கரையில் இருந்தவர்களிடம் அவர்கள் சுண்ணப் பொடிகளைக் காட்டினார்கள். அவர்கள் இரண்டு பொடி களையும் சோதித்துப் பார்த்து, இரண்டும் நல்ல பொடிகளே ஏற்றத் தாழ்வு சொல்வதற்கில்லை என்று கூறினார்கள். வேறு சிலரும் இவ்வாறே கூறினார்கள். மற்றுஞ் சிலரிடத்தில் காட்டினபோது 'இந்தப் பொடிகளின் ஏற்றத் தாழ்வுகளை எங்களால் அறிய முடியவில்லை. சீவக நம்பியிடம் கொண்டு போய்க் காட்டுங்கள்' என்று சொன்னார்கள்.

மங்கையர் சீவக நம்பியை நாடிச் சென்றனர். சீவகன் ஆற்றங்கரை மணலில் தன்னுடைய தம்பியருடனும், நண்பர்களுடனும் அமர்ந் திருந்தான். அவ்விடம் சென்று இந்தப் பெண்கள் தாங்கள் கொண்டு வந்த சுண்ணப்பொடியைக் காட்டி, இவற்றில் எது சிறந்தது என்பதைக் கூறும்படி கேட்டுக்கொண்டார்கள்.

சீவகன் பொடிகளைத் தனித்தனியே கையில் எடுத்து நோட்டம் பார்த்தான். பின்னர் முகர்ந்து மணம் பார்த்தான்

கடைசியில் “இந்தச் சுண்ணந்தான் (குணமாலையின் சுண்ணம்) சிறந்தது” என்று கூறினான்.

66

காரணம் என்ன?" என்று கேட்டனர் தோழிப் பெண்கள்.

“இந்தப் பொடி (சுரமஞ்சரியின் பொடி) மழை காலத்தில் செய்யப் பட்டது. இந்தப் பொடி (குணமாலையின் பொடி) வேனிற் காலத்தில்