பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

153

செய்யப்பட்டது. வேனிற் காலத்தில் செய்யப்பட்ட பொடி தான் சிறந்தது” என்று சீவகன் அவர்களுக்கு விளக்கங் கூறினான்.

பெண்கள் அவன் கூறிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்கி னார்கள். தெளிவாகத் தெரியும்படி காட்டுங்கள் என்று கேட்டனர்.

66

‘காட்டுகிறேன் பாருங்கள்” என்று கூறிச் சீவகன் இரண்டு தட்டி லிருந்தும் தன்னுடைய இரண்டு கைகளிலும் ஒவ்வொரு படிச் சுண்ணத்தை எடுத்து மரத்தண்டை மொய்த்துப் பறந்து கொண்டிருந்த வண்டுகளிடையே தூவினான். வண்டுகள் சுரமஞ்சரியின் பொடியில் படியவில்லை. குணமாலையின் பொடியில் மொய்த்துப் பறந்தன.

66

'இப்பொழுது இதிலிருந்து எந்தப் பொடி சிறந்தது என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்” என்று சுட்டிக்காட்டினான் சீவகன்.

பெண்கள் திரும்பி வந்து சீவகன் கூறிய தீர்ப்பையும் காட்டிய சான்றையும் குணமாலைக்கும் சுரமஞ்சரிக்குங் கூறினார்கள்.

சுரமஞ்சரி தான் தோற்றதை எண்ணி மனம் வருந்தினாள். இவ்வாறு தீர்ப்புக் கூறின சீவகன் மேல் சினங்கொண்டாள். அவனை இகழ்ந்து பேசினாள். “சீவகன் மழை வள்ளல். நல்ல இடம் தீய இடம் என்பதை அறியாமல் மழை பெய்கிறது போல, சீவகனுக்கு எது நல்லது எது தீயது என்பது தெரியவில்லை” என்று கூறி, “சீவகன் என்னிடம் வந்து கெஞ்சும்படி செய்கிறேன் பார்' என்று சூளுரைத்தாள்.

மாற்றம்' ஒன்றுரையாள் மழை வள்ளல் என் ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்ற சொல் தோற்று வந்தென் சிலம்படி கைதொழ நோற்பன். தோற்றனை நீ யென ஏகினாள்

(குணமாலையார் 49)

பிறகு தோழியருடனும் பணிப்பெண்களுடனும் ஆற்றில் நீராடா மலே தன்னுடைய மாளிகைக்குத் திரும்பிவிட்டாள்.

சுரமஞ்சரி நீராடாமல் திரும்பி வந்ததைக் கண்டு அவளுடைய தாய் அதன் காரணமென்னவென்று கேட்டாள். தோழியர், ஆற்றங்கரையில் நடந்ததைத் தெரிவித்து, இனி எந்த ஆடவரையும் பார்ப்பதில்லை, அவர் பெயரைக் காதாலுங் கேட்பதில்லை, பார்த்தாலும், கேட்டாலும் அன்று உணவு கொள்வதில்லை என்று சபதஞ் செய்திருக்கிறாள் என்பதையுங் கூறினார்கள்.