பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

"ஐயோ பாவம் சீவகன் நூறாண்டு வாழட்டும்" என்று வாழ்த்தினாள் ஒருத்தி.

“சுரமஞ்சரி இதுவரையில் ஆடவர் ஒருவரையும் இந்தக் கன்னி மாடத்தில் வரவிட்டதில்லை. இன்று உமக்குச் சோறு கொடுத்து உண்பித்து உபசரித்தாள். ஆடவரிடத்திலிருந்த கோபம் நீங்கினாள். நீர் சீவகன்போல மிக நன்றாக இசை பாடுகிறீர். அருள் கூர்ந்து இன்னொரு ஒரு முறை இசை பாடுங்கள். இல்லையேல் உம்மை விடமாட்டோம்’ என்று அவனை அவர்கள் இசை பாடும்படி கேட்டுக் கொண்டார்கள்.

அன்போட்டி எமக்கோர் கீதம் பாடுமின் அடித்தியாரும்

முன்பட்ட தொழிந்து துங்கண் முகவியர் முனிவு தீர்ந்தார் பொன் தொட்டோம், யாமும் நும்மைப் போகொட்டோம் பாடல் கேளாது என்பட்டு விடினும் என்றார் இலங்கு பூங் கொம்போ டொப்பார். “பொன் கொடுத்தால் இசை பாடுவேன்” என்றான் கிழவன். “கொடுப்பேன், பாடுக" என்றாள் சுரமஞ்சரி.

கிழவன் இசை பாடினான். அந்த இசை கிழவன் குரலாக இல்லை; வாலிபன் குரலாக இருந்தது. மிக இனிமையாக அவன் பாடின இசைப் பாட்டு அவர்களின் மனத்தைக் கவர்ந்தது. சுரமஞ்சரி பெரிதும் அந்த இசையில் ஈடுபட்டு அந்த அமிர்தகானத்தைக் கேட்டு மனமகிழ்ந்தாள். அவன் நெடுநேரம் பாடினான். பாடி முடிந்த பிறகு பொற்காசுகளை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தாள். அவள் தான் மேற்கொண்டிருந்த ஆடவரைக் காண்பதும் இல்லை, அவரை நினைப்பதும் இல்லை என்னும் சபதத்தை விட்டுவிட்டாள்.

சீவகனை மணஞ்செய்து கொண்டு வாழ வேண்டும் என்று அவள் விரும்பினாள். நாளைக் காலையில் காமன் கோட்டத்துக்குப் போய்ச் சீவகனை மணஞ் செய்து கொள்ள வரம் வேண்டுவேன் என்று முடிவு செய்துகொண்டாள். இவ்வாறு அவள் கொண்ட சபதம் முடிவுற்றது.

பாடினான் தேவகீதம் பண்ணினுக் கரசன் பாடச்

சூடக மகளிர் சோர்ந்து செருக்கிய மஞ்சை ஒத்தார்

ஆடகச் செம்பொற் பாவை அந்தணற் புகழ்ந்து செம்பொன் மாடம்புக்கு அனங்கன் பேணி வரங் கொள்வல் நாளை என்றாள்