பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

பார்க்கிறான். நரம்புகளைத் தடவிப் பார்க்கிறான். பார்த்து “இது தண்ணீரில் இருந்து இளகின மரத்தினால் செய்யப்பட்டது. இது வேண்டாம்” என்று சொல்லி அதைத் திருப்பிக் கொடுக்கிறான்.

தோழி இன்னொரு வீைைணயைக் கொடுக்கிறாள். அதையும் சீவகன் சோதித்துப் பார்க்கிறான். “இது தண்ணீரில் கிடந்து அழுகிப் போன மரத்தினால் செய்யப்பட்டது" என்று கூறி அதையும் திருப்பிக் கொடுக்கிறான். தோழி இன்னொரு வீணையைக் கொடுக்கிறாள். அதை வாங்கி சீவகன் ஆராய்ந்து பார்த்து “இது வெட்டுண்ட மரத்தினால் செய்யப்பட்டது. இதை எடுத்துச் செல்” என்று திருப்பிவிடுகிறான். இன்னொரு வீணை தரப்படுகிறது. இதனை யாராய்ந்து பார்த்து “இடி விழுந்து சிதைந்த மரத்தினால் செய்யப்பட்டது. இது வேண்டாம்” என்று இதையும் திருப்பி விடுகிறான். வீணாபதி மற்றும் ஒரு வீணையைக் தருகிறாள். ஆராய்ந்துபார்த்து “இது சுடப்பட்டு வெந்துபோன மரத்தினால் செய்யப்பட்டது. இதுவும் வேண்டாம்" என்று நீக்கிவிடுகிறான். மற்றொரு வீணையைக் கொடுக்கிறாள். இதை ஆராய்ந்து பார்த்து 'இது நல்ல மரத்தினால் செய்யப்பட்டது தான். ஆனால், நரம்பில் குற்றம் இருக்கிறது. நரம்போடு நரம்பாக மயிர் முறுக்கிக் கொண்டிருக்கிறது பார்!' என்று கூறி நரம்புடன் சேர்ந்திருக்கிற மயிரை எடுத்து காட்டி இந்த வீணையையும் ஒதுக்கி விடுகிறான்.

தோழி கொடுத்த வீணைகளை யெல்லாம் வாங்கிப் பார்த்து சீவக நம்பி அவற்றிலுள்ள குற்றங்களை ஒவ்வொன்றாகக் கூறி அவற்றை நீக்கிவிட்டதைக் கண்ட அவையிலுள்ளோர் இவனுடைய இசைக் கலை நுட்பத்தை மெச்சிப் புகழ்கின்றனர். 'சீவக நம்பி போட்டியில் வெற்றியடைவது உறுதி' என்று கூறுகின்றனர். ‘முன்பு வந்தவர் யாரும் இந்தக் குற்றங்களை யறிந்தார்களில்லையே. குற்றமுள்ள வீணை, குற்றமில்லாத வீணை என்று கூட அவர்கள் அறியாமற் போனார்களே' என்று கூறி வியப்படைகின்றனர்.

சீவக நம்பி தன் நண்பனான நபுலனிடம் இருந்த குற்றமற்ற நல்ல வீணையை வாங்கிக்கொண்டு அதனை வாசித்து இசையோடு பாடுகிறான். இசை மரபு பிறழாமலும் இனிய குரலோடும் பாடுகிற இவனுடைய இசைப் பாட்டைக் கேட்டு அவையோர் மெய்ம்மறந்து மகிழ்கின்றனர். சீவகனுடைய இசை விருந்து அமிர்தம் போன்று இனிக்கிறது. இது என்ன தேவகாணமோ! இவன் மண்ணுலகில் வாழும்