பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

உதயணனிடமிருந்து கற்ற வித்தைகளைச் செய்து காட்டினார்கள். அவர்களின் திறமையைக் கண்டு எல்லோரும் மெச்சிப் புகழ்ந்தார்கள். பிறகு அரசகுமாரி வாசவதத்தையின் இசைக்கலையை அரங்கேற்றுவதற்கு அரசன் சபை கூட்டினான். இசையாசிரியர், யாழ்வித்தகர் முதலியோரும் அமைச்சர்களும் பிரபுக்களும் நகரப் பெருமக்களும் அழைக்கப்பட்டனர்.

வாயிற் கூடத்தும் சேரிப் பாடலும்

கோயில் நாடகக் குழுக்களும் வருகென யாழுங் குழலும் அரிச்சிறு பறையும்

தாழ முழவும் தண்ணுமைக் கருவியும் இசைச் சுவை தரீஇ எழுபவும் ஏறிபவும்

விசைத்தெறி பாண்டிலோடு வேண்டுவ பிறவும்

கருவியமைந்த புரிவளை யாயமொடு

பல்லவை இருந்த நல்லா சிரியர்

அந்தர உலகத்து அமரர் கோமான்

இந்திரன் மாண்நகர் இறைகொண் டாங்கு.

அரங்க மண்டபம் வந்து சேர்ந்தார்கள்.

மண்டபத்தின் எதிரே இசையரங்கமேடை அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. அரச குமாரி வாசவதத்தை தோழிப் பெண் களுடன் அரங்க மேடையில் வந்து அமர்ந்தாள். பிறகு செவிலித்தாய் சபைக்கு வணக்கங் கூறச் சொன்னபடி அவைப் பரிசாரமாக அவையை வணங்கினாள். பிறகு யாழ்க் கருவியை வாசித்தாள். இசை இலக்கணப் படி முறையாகவும் இனிமையாகவும் யாழ் வாசித்ததைக் கேட்டுச் சபையோர் மகிழ்ச்சியடைந்தார்கள். பின்னர் வாசவதத்தை இசை பாடினாள். ஐவகைக் கதியும் அற்றம் இன்றித்

தெய்வ நல்யாழ் திருந்திழை தைவர

மெய்பனிப் பதுபோல் மொய்யவை மருள நாற்பெரும் பண்ணும் எழுவகைப் பாலையும் மூவேழ் திறத்தொடு முற்றக் காட்டி

நலமிகு சிறப்பொடு நல்லவை புகழ

இயம்வெளிப் படுத்தபின் இசைவெளிப் படீஇய எரிமலர்ச் செவ்வாய் எயிறுவெளிப் படாமைத் திருமலர்த் தாமரைத் தேன்முரன் றதுபோல்