பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

இலக்கணச் செவ்விரல் ஏற்றியும் இழித்தும்

தலைக்கண் தாழ்வும் இடைக்கண் நெகிழ்ச்சியும்

கடைக்கண் முடுக்கும் கலந்த காணமும்

மிடறும் நரம்பும் இடைதெரி வின்றி

பறவை நிழலிற் பிறர்பழித் தீயாச்

செவிச்சுவை அமிர்தம் இசைத்தலின் மயங்கி

மாடக் கொடுமுடி மழலையம் புறவும்

ஆடமை பயிரும் அன்னமுங் கிளியும்

பிறவும் இன்னன பறவையும் பறவா ஆடுசிற கொடுக்கி மாடஞ் சோர

கேட்டு மகிழ்ந்தனர்.

அப்போது அவர்கள், “உண்மை யறியாமல் உம்மை இசை யறியா மூடன் என்று கருதினோம். உம்மிடம் நாங்கள் இசை பயில விரும்புகிறோம். நாங்கள் உம்முடைய மாணாக்கியர். எமக்கு யாழ் வித்தையைக் கற்பிக்க வேண்டும்” என்று வேண்டினார்கள். உதயணனும் இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கினான்.

பலவிதமாக அமைந்த யாழ்களை உதயணன் அவர்களுக்குக் காட்டி இந்திந்த யாழ்களில் இன்னின்ன குற்றங்கள் உள்ளன என்று அவன் கூறினான். ஒரு யாழை எடுத்துக்காட்டி “இது பட்டுப் போய் உளுத்துப்போன மரத்தினால் செய்யப்பட்டது. ஆகையால் இது வாசிக்க உதவாது” என்று விளக்கினான். இன்னொரு யாழை எடுத்து “இது நல்ல மரத்தினால் செய்யப்பட்ட செம்மையான யாழ்; ஆனால், இதன் நரம்புகள் நன்றாக உலர்வதற்கு முன்பே இணைக்கப்பட்ட படியால் இதன் நரம்புகள் அதிகமாக முறுக்கேறிக் கொண்டன. ஆகையால் இது வாசிக்க உதவாது; வேறு நரம்புகளைக் கொடுங்கள்” என்று கேட்டு வேறு நரம்புகளைப் பெற்றான்.

அந்த நரம்புகளிலும் சில குற்றங்கள் இருப்பதை அவர்களுக்கு விளக்கிக் கூறினான். ‘இந்த நரம்பின் முறுக்கினுள் மணல் சேர்ந்துள்ளது. இது உதவாது. இந்த நரம்பிலும் மயில் சேர்ந்து முறுக்குண்டிருக்கிறது. இதுவும் உதவாது' என்று நரம்புகளின் குற்றங்களை அவர்களுக்கு விளக்கிக் காட்டினான். பிறகு நல்ல செம்மையான நரம்புகளை எடுத்து விசித்துத் திவவுகளில் கட்டியமைத்துக் காட்டினான். பிறகு யாழ் வாசிக்கும் முறைகளையும் அவர்களுக்குக் கற்பித்தான்.