பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

பரியகம் வால்வளை பவழப் பல்வளை

அரிமயிர் முன்கைக் கமைவுற அணிந்து

வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரங் சேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் வாங்குவில் வயிரத்து மரகதத் தாள் செறி

காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து கயிற்கடை யொழுகிய காமர் தூமணி

செயத்தகு கோவையிற் சிறுபுற மறைத்தாங்கு இந்திர நீலத் திடையிடை திரண்ட சந்திரபாணி தகைபெறு கடிப்பினை யங்காது அகவயின் அழகுற அணிந்து தெய்வ வுத்தியொடு செழுநீர் வலம்புரி

தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி மையீ ரோதிக்கு மாண்புள வணித்து

மாதவி பொன்னும் மணியுங் காய்த்த பூங்கொடி போலக் காணப் பட்டாள்.

கோவலன் செல்வச் சீமான்தான். குன்றத்தனைச் செல்வமானாலும் மிதமிஞ்சிச் செலவு செய்தால் மலையளவுள்ள பொருளும் குன்றிப் போகும் அல்லவா? மாதவியின் ஆடம்பரச் செலவும் கோவலனின் ஊதாரித்தனமும் அவனுடைய பெருஞ் செல்வத்தைக் குறைத்து விட்டன. கடைசியில் அவன் ஏழ்மையடைந்து வறியவனானான்.

ம்

வழக்கம் போல அந்த ஆண்டும் இந்திரவிழாவும் மாதவியின் ஆடல்பாடல்களும் நடைபெற்றன. விழா முடிந்த அடுத்தநாள் நகர மக்கள் கடற்கரைக்குச் சென்று நீராடுவது வழக்கம். நகரத்துச் செல்வர் கடற்கரையில் திரைச் சீலையால் கூடாரம் அமைத்து அதில் சென்று தங்கியிருந்து மாலையானவுடன் விடுதி திரும்புவார்கள். நகரத்துச் செல்வரைப் போலவே கோவலனும் மாதவியும் அன்று காலையில் கடற்கரைக்குப் போனார்கள். மாதவி வண்டியில் அமர்ந்து சென்றாள். கோவலன், அக்காலத்து நாகரிகப் பிரபுக்களின் வழக்கப்படி அத்திரி (கோவேறு கழுதை) ஏறிச் சென்றான். சென்று கடற்கரை மணலில் இவர்களுக்கென்று அமைத்திருந்த கூடாரத்தில் தங்கினார்கள். தங்கி மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தார்கள். பொழுது கழிந்தது. மாலை நேரம் வந்தது. மாதவி யாழைக் கோவலனிடங் கொடுத்து அதனை