பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

209

கோவலன் தன்னை மெய்யாகவே வெறுத்துவிட்டான் என்று அறிந்த மாதவி அவனுக்கு இன்னொரு கடிதம் உருக்கமாக எழுதி அதைக் கோசிகன் என்னும் பார்ப்பனனிடங் கொடுத்துக் கோவலனிடம் கொடுக்கும்படி அனுப்பினாள். கோசிகன் கடிதத்தை எடுத்துக்கொண்டு போய் கோவலன் இருக்கு மிடமறியாமல் பல இடங்களிலும் தேடித் திரிந்து கடைசியாக மதுரை நகரத்துக்கு அருகில் கோவலனைக் கண்டுபிடித்து, காதலியின் கடிதத்தைக் கொடுத்தான். கோவலன் அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்துப் பார்த்தான். அந்தக் கடிதத்தின் வாசகம் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

அடிகள் முன்னர் யான்அடி வீழ்ந்தேன்

வடியாக் கிளவி மனங்கொளல் வேண்டும் குரவர்பணி யன்றியுங் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என்பிழைப் பறியாது கையனும் நெஞ்சம் கடியல் வேண்டும்

பொய்தீர் காட்சிப் புரையோய்! போற்றி

இந்த வாசகத்தைப் படித்த கோவலனுக்கு மாதவியின் மேலிருந்த வெறுப்பு நீங்கிற்று. ஆனால் அவன் பூம்புகாருக்குத் திரும்பி வரவில்லை. மதுரை நகரத்துக்கே போய்விட்டான். அங்கும் ஊழ் வினை அவனைத் தொடர்ந்தது. தன்னுடைய பொற்சிலம்புகளை விற்கச் சென்ற கோவலன் மேல் பாண்டி யனுடைய ராணியின் காற் சிலம்பை அவன் களவாடினான் என்று பொய்க் குற்றஞ் சாற்றி அவனைக் கொலை செய்து விட்டார்கள். கோவலனின் ஊழ்வினை இப்படி முடிந்தது.

கோவலன் இறந்துபோன செய்தியை மாடலன் என்பவன் மூலமாக அறிந்த மாதவி தீராத்துயரம் அடைந்தாள். வாழ்க்கையை வெறுத்தாள். அரங்கேறி ஆடல் பாடல் நிகழ்த்துவதை முழுவதும் நிறுத்திவிட்டாள். கணிகையர் குலத்தில் பிறந்தவளாயிருந்தும் குலமகள் போலக் கைம்மை நோன்பை மேற்கொண்டாள். பட்டாடைகளையும் நவ ரத்தினப் பொன் நகைகளையும் அணிந்து பொன் பூத்த பூங்கொடிபோல் இருந்த அவள் இப்போது நகைகளைக் களைத்துவிட்டு, இலையுதிர்ந்த மரம் வெறும் கிளைகளுடன் இருக்கும் காட்சிபோலக் காணப்பட்டாள்.

கணிகைத் தொழிலை மேற்கொள்ளாமலும் அரங்கம் ஏறி ஆடல் பாடல் நிகழ்த்தாமலும் மாதவி குலமகள்போலக் கைம்மை நோன்பிருப் பதைக் கண்ட அவளுடைய தாய் சித்திராபதி அவளுடைய மனத்தை