பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

-

பெற்றிருந்தது. காவிரிப்பூம்பட்டினத்தில் பௌத்த மதத்தின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. புத்தர் பெருமான் உயிர் வாழ்ந்திருந்த காலத்திலே கள்வர், கணிகையர் போன்ற தாழ்ந்த செயல் செய்தவரையும், அவர் திருத்தி உயர்நிலையடையச் செய்தார். அவர் கணிகையொருத் தியையும் நல்வழிப்படுத்தினார். அவரைப் பின்பற்றிப் பௌத்த மதமும் தீயவழியில் நடந்தவர் களையும் நல்வழிப்படுத்திக் கைதூக்கிவிட்டது. இதனை மாதவி நன்கறிந்திருந்தாள். தன்னையும் தன் மகளான மணி மேகலையையும் கைதூக்கி நல்வாழ்க்கையில் செலுத்தப் பௌத்த மதந்தான் உறுதுணை என்பதை அவள் அறிந்தாள். ஆகவே, சித்திரா பதியிடமிருந்து பிரிந்து வந்து பௌத்த மதத்தில் அடைக்கலம் புகுந்தாள்.

காவிரிப்பூம்பட்டினத்தில் பௌத்த விகாரையும் பௌத்த சங்கமும் அக்காலத்தில் இருந்தன. அக்காலத்தில் பௌத்தச் சங்கத்தின் தலைவராக இருந்தவர் அறவண அடிகள் என்னும் பௌத்தத் துறவி, இவர் பௌத்த பிச்சுச் சங்கத்தின் சங்கபாலராக (தலைவராக) இருந்தார். மாதவி மணிமேகலையுடனும் தன் தோழி சுதமதியுடனும் பௌத்த விகாரைக்குச் சென்று அறவண அடிகளை வணங்கி அவருக்குத் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தாள். தங்களைப் பௌத்த மதத்தில் சேர்த்தருளும்படி வேண்டிக் கொண்டாள். அறவண அடிகள் அதற்கு இணங்கினார். மாதவியும் மணிமேகலையும் சுதமதியும் அறவண அடிகளிடம் திரிசரணமும் பஞ்சசீலமும் பெற்றார்கள்.

புத்தஞ் சரணங் கச்சாமி தம்மஞ் சரணங் கச்சாமி

சங்கஞ் சரணங் கச்சாமி

என்னும் மும்மணிகளைப் புகலடைந்து மாதவியும் மணி மேகலையும் சுதமதியும் பௌத்த மதத்தைச் சேர்ந்தார்கள். பிறகு அறவண அடிகள் அவர்களுக்குப் பஞ்சமூலங்களைப் போதித்தார். அன்று முதல் அவர்கள் பௌத்தர்களாகிப் பௌத்த சமூகத்தவர் ஆனார்கள்.

அந்த ஆண்டும் வழக்கம்போல காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழாத் தொடங்கிற்று. விழாவில் மாதவி சென்று கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆகவே, விழா சிறப்புப் பெறவில்லை.