பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் /213

சித்திராபதி இந்திர விழாவில் வந்து ஆடல் பாடல் நிகழ்த்தும்படி மாதவியை அழைத்தாள். வயந்தமாலை என்பவளிடம் சொல்லி யனுப்பினாள். மாதவி நாடக அரங்கத் துக்குப் போக மறுத்துவிட்டாள்.

66

‘புத்தம் தன்மம் சங்கம் என்னும் மும்மணிகளைச் சரணம் அடைந்து பஞ்சமூலம் பெற்றுப் பௌத்தராக வாழ்கிறறோம். இனி, மீண்டும் கணிகையர் தொழிலுக்கு வரமாட்டோம். நீ போய் இச்செய்தியை என் தாய் சித்திராபதிக்குச் சொல்லு” என்று வயந்த மாலையிடம் மாதவி கூறினாள். மாதவியின் கலை நிகழ்ச்சிகள் இல்லாதபடியால் இந்திர விழா சிறப்படைய வில்லை.

மாதவியும் மணிமேகலையும் சுதமதியும் பௌத்த மதத்தில் நின்று பௌத்தராக வாழ்ந்தார்கள். அவர்கள் அறவண அடிகளிடம் பௌத்த தர்மங்களைக் கேட்டறிந்தார்கள். மாதவி சிறந்த பெளத்த மதப் பக்தியுள்ளவளானாள். அவள் காலையிலும் மாலையிலும் பௌத்த விகாரையில் புத்தர் பெருமான்மேல் இசை பாடிக்கொண்டிருந்தாள்.

அடுத்த ஆண்டு புயல் வீசிற்று. பெருமழை பெய்து காவிரி ஆற்றில் வெள்ளம். புரண்டோடியது. கடல் கொந்தளித்தது. கடல் நீரும் காவிரியாற்றின் வெள்ளமும் கரைபுரண்டு வந்து காவிரிப்பூம் பட்டினத்தில் புகுந்தன. நகரம் வெள்ளத்தில் முழுகிற்று. நகரமக்கள் நகரத்தைவிட்டு வேறு இடம் சென்றார்கள். அரசனும் பெருங்குடி மக்களும் வேறு இடஞ் சென்றார்கள் அறவண அடிகள் காஞ்சி புரத்துக்குச் சென்று அங்குத் தரும தவனம் என்னும் பூஞ்சோலையில் இருந்த பௌத்தப் பள்ளியில் தங்கினார்.