பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஆனாயனார் குழலிசை வித்தகர்

தமிழகத்திலே மேல்மழ நாட்டில் மங்கலம் என்னும் ஊர் இருந்தது. முல்லை நிலமாக அமைந்திருந்தபடியால் அவ்வூரைச் சூழ்ந்து சிறு காடுகளும் குன்றுகளும் புல்வெளிகளும் இருந்தன. மான்களும் முயல்களும் ஆடு மாடுகளும் கன்று கனிகளும் துள்ளி விளையாடின. கிளி, குயில் மயில் முதலிய பறவைகளும் அங்கு மிங்கும் பறந்தன. அந்த ஊரில் ஆயர் (இடையர்) வாழ்ந்திருந்தனர். அவர்கள் பசுமந்தைகளையும் எருதுகளையும் வளர்த்து வந்தார்கள்.

6

அவ்வூரில் ஆயர் ஒருவர் இருந்தார். அவர் அவ் ஊர்ப் பசுக்களை ஓட்டிக் கொண்டுபோய் காட்டில் மேய்ப்பார். அதனால் அவருக்கு ஆனாயர் (ஆன்-பசு, ஆயர்-இடையர்) என்று பெயர் உண்டாயிற்று. அவருக்கு அவருடைய பெற்றோர் இட்ட பெயர் மறைந்து போயிற்று. ஆனாயர் இசைப் புலவர். குழல் வாசிப்பதில் வல்லவர். இசைக் கருவிகளில் யாழும் குழலும் இனிமையானவை யல்லவா? குழலினிது யாழினிது என்று திருவள்ளுவர் போன்ற அறிஞர்கள் கூறுவார்கள். ஆனாயர் இனிய குழல் வாசித்து இசையமுதத்தை வழங்கினார்.

ஆனாயர், பசுமந்தைகளைக் காட்டில் ஓட்டிக்கொண்டு போய் மேயவிடுவார். இயற்கையழகு மிகுந்த சூழ்நிலையில் குன்றுகளில் ஆனிரைகள் மேய்ந்துகொண்டிருக்கும்போது ஆனாயர் மரநிழலில் அமர்ந்து குழல் வாசித்தார். அது இயற்கையழகுள்ள சூழ்நிலை குன்றுகளும் குறுங்காடுகளும் அமைந்த இடம். அவர் கடவுள் பக்தராகையால் பக்தியோடு அவர் குழல் வாசித்தார். அவருடைய குழல் இசையில் தெய்வீகம் கலந்திருந்தது. அவருடைய குழல் இசை செவிக்கும் மனதுக்கும் இன்பமாக இருந்தது. பசுக்கள் வயிறாறப் புல் மேய்ந்தப் பிறகு, ஆனாயர் குழல் ஊதும் இடத்துக்கு வந்து அவரைச் சூழ்ந்து இருந்து குழல் ஓசையைக் கேட்டு மகிழ்ந்தன. காடுகளில் இருந்த மான்களும் முயல்களும் வேறு விலங்குகளும் அங்கு வந்து அசைவற்று நின்று குழலிசையைச் செவியாறக் கேட்டு மகிழ்ந்தன. மயில்களும் பறவைகளும் வந்து கேட்டு இன்புற்றன. அழகான