பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் /215

இயற்கைக் காட்சிகள் உள்ள அந்தக் காட்டிலே அமைதியான சூழ் நிலையில் ஆனாயர் இசைக்கும் வேய்ங்குழல் இசை தேவகானமாக, இன்னமுதமாக செவி குளிர இசைத்தது. அந்த இன்ப இசையில் விலங்குகளும் பறவைகளும் ஈடுபட்டுத் தம்மை மறந்து அசைவற்று இருந்தன. வேய்ங்குழல் வித்தகர் ஆனாயர் இசை இலக்கண முறைப்படி குழல் இசைத்தார்.

மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன்முறையால் தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும் அந்தரத்து விரற் றொழில்கள் அளவுபெற அசைத்தியக்கிச் சுந்தரச் செங் கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண எண்ணியநூல் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும் வண்ண இசை வகை யெல்லாம் மாதுரிய நாதத்தில் நண்ணிய பாணியும் இயலும் தூக்குநடை முதற்கதியில் பண்ணமைய எழும் ஓசை எம்மருங்கும் பரப்பினார்

(ஆனாய நாயனார் புராணம் 27, 28)

புல்வயல்களுக்கிடையே ஆங்காங்கே மரஞ்செடிகள் வளர்ந்துள்ள அந்த முல்லை நிலத்திலே சரக்கொன்றை மரங்களும் இருந்தன. பூக்கும் காலத்தில் சரக்கொன்றைப் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்துச் சரஞ்சரமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. கொன்றை மரங்களில் கிளைகள் தோறும் மஞ்சள் நிறமான பூக்கள் சரஞ்சரமாக பூத்துத் தொங்கும் எழில் பொன்பூத்தது போலக் காட்சிக்கு இனிமையாக இருந்தது. அந்தக் காட்சி அம்முல்லை நிலத்துக்குப் பேரழகைத் தந்தது. ஆனாயருக்கு பூக்காட்சி மனத்தைக் கவர்ந்தது. சரக்கொன்றைகள், சிவபெருமான் தம்முடைய திருமுடியில் அணிந்துள்ள கொன்றை மலர் போல் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது அவர் குழல் ஊதிக் கடவுளின் புகழை இசையிலிட்டுப் பாடுவார். அந்த வேய்ங்குழ லோசை தேனும் பாலும், பாகும் அமுதமும் கலந்தது போன்ற தேவ கானமாகத் திகழ்ந்தது. வழக்கம்போல பசுக்களும் விலங்குகளும் பறவைகளும் வந்து, அமைதியாகக் கேட்டு இன்புற்றன. கோவலரும் வந்து இசை கேட்டு இன்புற்று மகிழ்ந்தார்கள்.

ஆனிரைகள் அறுகருத்தி அசைவிடாது அணைந்தயரப்

பால் நுரைவாய்த் தாய்முலையில் பற்றும்இளங் கன்றினமும் தானுணவு மறந்தொழியத் தடமருப்பின் விடைக்குலமும் மான் முதலாம் கான் விலங்கும் மயிர்முகிழ்த்து வந்தணைய