பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பாண்டியனும் பாடினியும்

ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்' பாண்டி நாட்டை அரசாண்ட காலத்தில் அவன் இலங்கை மேல் போருக்குச் சென்று இலங்கை யரசனான சேனனை வென்றான். போரிலே தோற்றுப் போன சேனன் தன்னுடைய நகரமான அநுராதபுரத்தைவிட்டு மலைய நாட்டுக்கு ஓடி ஒளிந்தான்.

வெற்றிபெற்ற ஸ்ரீவல்லபன் அநுராதபுரத்திலிருந்த செல்வங்களைக் கைப்பற்றினான். மலைய நாட்டுக்குப் போன சேனன் பிறகு பாண்டியனோடு உடன்படிக்கை செய்துகொண்டு அநுராதபுரத்துக்கு வந்து மீண்டும் அரசாண்டான். சிங்கள நாட்டுப் போரை வென்ற ஸ்ரீவல்லபன் திரும்பி வந்து சோழ நாட்டின் மேலும் போர்செய்து அந்நாட்டையும் வென்றான். அவனுக்குப் பரசக்கர கோலாகனன் என்னும் பெயர் ஏற்பட்டது.

ஸ்ரீவல்லபன் சிற்றின்பப் பிரியன். அவனுக்குப் பல மனைவியர் இருந்தார்கள். அவன் சிற்றின்பப் பிரியன் என்பதை ஒரு பாண்டியச் செப்பேடு அவனை 'வேய்போலும் தோழியர் கேள்' என்று அழகு மொழியில் கூறுகிறது. அதாவது, மூங்கில் போன்ற அழகான தோள் களையுடைய பெண்களோடு உறவு உள்ளவன் என்பது பொருள். இவன் பாண்டிய நாட்டை அதன் தலைநகரமான மதுரையிலிருந்து அரசாண்டான்.

அந்தப் பாண்டியனுடைய சபையில் பாணபத்திரன் என்னும் இசைப் புலவன் உலகப் புகழ் பெற்றிருந்தான்.

பாணபத்திரனுடைய மனைவியான பாடினியும் இசைக் கலையில் வல்லவள். அவள் அரண்மனையின் அந்தப்புரத்தில் அரசியர்களிடத்தில் இசை பாடி வந்தாள். சின்றின்பப் பிரியனாகிய ஸ்ரீவல்லபன் அந்தப்புரத்தில் ஒரு நாள் இசைச் செல்வி பாடினியைக் கண்டான். கண்டு அவளைப் பெண்டாள நினைத்தான். கற்புடைய அவள், அவன் கருத்துக்கு இசையவில்லை. அவள் அரசனை வெறுத்து நோக்கினாள். “அரசனாகிய நீ நேர்மையாக நீதியாக நடக்க வேண்டும். சொக்கப் பெருமான் மேல் ஆணை. உன் தீய எண்ணத்தை